Category:
Created:
Updated:
கனடாவின் ரொறன்ரோ பகுதியில் பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட டாக்சி சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக குறித்த நபர் துன்புறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொரண்டோவின் பிரிட்ஜ் மவுண்ட் மற்றும் டான்போர்த் வீதிகளுக்கு அருகாமையில் கடந்த 28 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 47 வயதான சபீர் ஹுசைன் சீமா என்ற நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டுகள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபர் எதிர்வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான துன்புறுத்தல்களில் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த விடயங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.