Ads
அத்வானி மருத்துவனையில் அனுமதி
பாஜக மூத்த தலைவரும் ,முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
96 வயதாகும் எல்.கே.அத்வானி கடந்த ஜூன் 26-ம் தேதி வயது முதிர்வு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads