உலகக் கிண்ண கிரிக்கெற் - பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர்- 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது.
அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைப் பெற்றதுடன், விராட் கோலி 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் நஜ்முல் ஹுசைன் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதிரடியாக விளையாடி அரைசதம் மற்றும் ஒரு விக்கெட்டை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000