- · 5 friends
-
I
இது எப்படி இருக்கு ......
"டாக்டர் இவன் என் பேரன்"
.
"என்ன செய்யுது இவருக்கு"?
.
"அவனுக்கு ஒண்ணும் செய்யல. அவன்தான் எந்நேரமும் ஃபோனை போட்டு நோண்டிட்டிருக்கான். பக்கத்தூட்டு புள்ளதான் சொல்லுச்சு. இந்த சீக்குக்கு புதுசா ஆஸ்பத்திரி தொறந்துருக்காக போய் காட்டுங்கன்னு"
.
"படிக்கிறியாப்பா"?
.
"இல்ல டாக்டர் நான் வொர்க் பண்றேன்"
.
"பாட்டி.... நீங்க வெளியே இருங்க... நான் பேசுறேன்"
.
"ஏம்ப்பா எந்நேரமும் அதில இருக்கே.... தப்பில்லையா"?
.
"உங்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருக்கா டாக்டர்"?
.
"இருக்குப்பா"
.
"ஸ்டேட்டஸ்லாம் போடுவீங்களா"?
.
"எனக்கு எங்கே அதுக்குலாம் நேரம்"?
.
"போங்க டாக்டர் நீங்க சுத்த வேஸ்ட்டு...."
.
"நான் பெரிய ஸ்பெஷலிஸ்ட்டுபா.... என்னப்போயி......"
.
"இருந்து என்ன செய்ய? உலகம் தெரியாத ஆளா இருக்கியளே"?
.
"நான் லண்டன்ல படிச்சிருக்கேன்பா"
.
"அட போங்க டாக்டர்..... எப்ப பாரு ஊசி மாத்திரை பேஷண்ட்டுன்னு.... அங்க போயி பாருங்க டாக்டர்... எவ்ளோ அழகான உலகம்னு"
.
"அப்டி என்னதாம்ப்பா இருக்கு"?
.
"ஆயிரத்தெட்டு பிரச்சனை இருந்தாலும் ஒவ்வொருத்தரு புலம்பல பாத்து நம்ம ராஜா மாதிரி இருக்குற ஃபீல் வரும்"
.
"இன்ட்ரஸ்டிங் அப்புறம்"?
.
"திடீர்னு ரத்தம் தேவைப்பட்டா என்ன பண்ணுவீங்க"?
.
"ப்ளட் பாங்க்குக்கு தகவல் சொல்லிட்டு கைய பிசைஞ்சிட்டு நிப்போம்"
.
"நாங்க ஒரு ஸ்டேட்டஸ் தட்டுனா போதும்.... பத்து பேர் இரத்தம் குடுக்க வந்திடுவாங்க... நாலு வருசத்துக்கு முந்துனத கூட அக்கறையா ஷேர் பண்ணுவோம்னா பாத்துக்கோங்க"
.
"உசுர் காக்கும் விசயமாச்சேப்பா"
.
"வீட்ல திட்னா என்ன பண்ணுவீங்க டாக்டர்"
.
"ரொம்ப சேடாகிருவேன்பா..... சமயத்தில் பெரிய சண்டையாகிடும்"
.
"என்னத்த திட்டுனாலும் நாங்க சேடாக மாட்டோம்..... சூடு சொரணைலாம் மருந்துக்கும் இருக்காது.... ஏன்னா எங்களுக்கு காதுலயே விழாது. இதையே பாத்துட்டு ஈஈஈஈஈன்னு உக்காந்துருப்போம்"
.
"இதுலாம் எங்கேப்பா கத்துக்கிட்டே"?
.
"பத்து நிமிசம் ஃபோனை கொடஞ்சா ஆட்டோமேட்டிக்கா வந்துடும்....
என்னோட ஒரு செல்ஃபிய எடுத்து.... க்ளினிக்கில் ஃப்ரெண்டுடன் னு கேப்ச்சர போட்டு அப்லோட் பண்ணுங்க"
.
பத்து நிமிஷம் கழித்து.....
.
"எல்லோரும் வாழ்த்து சொல்றாங்க.... எதுக்குப்பா"?
.
"அப்டித்தான் சொல்வாங்க. ஏன்னு நமக்கும் தெரியாது அவங்களுக்கும் தெரியாது"
.
"நான் க்யூட்டா இருக்கேனாம். ஒரு பொண்ணு சொல்லுதுப்பா..... நர்ஸ் ஒரு அர மணி நேரம் ஓ.பி ய நிறுத்திக்கோம்மா"
.
அடேய்..... இவ்ளோ நேரம் என்னடா பண்ற? மருந்து மாத்திரைலாம் வாங்கிட்டியாடா"?
.
"இல்ல பாட்டி நான் எல்லாமே அவருக்கு சொல்லி கொடுத்துட்டேன்......
அவர் ஃபோனை ஆப்பரேட் பண்ணிட்டு இருக்காரு"
- ·
- · GomathiSiva