ஒருமுறை ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைகள் வேடிக்கை பார்க்க ஒரு காட்டிற்குச் சென்றனர். அவர்களுக்கு மிகவும் தாகம் ஏற்பட்டு ஒரு ஆழமான கிணற்றைக் கண்டனர். அவர்கள் வறண்ட கிணற்றின் உள்ளே பார்த்தபோது, அடியில் சிக்கிய ஒரு விசித்திரமான பல்லி போன்ற உயிரினம், மலையைப் போல பெரியதாகத் தோன்றியது. சிறுவர்கள் அந்த உயிரினத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். தோல் பட்டைகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி அந்த உயிரினத்தை வெளியே இழுக்க முயன்றனர், ஆனால் அவர்கள் எவ்வளவோ முயற்சித்த போதிலும், அவர்களால் அதைத் தூக்க முடியவில்லை. பலமுறை தோல்வியடைந்த முயற்சிகளுக்குப் பிறகு, அவர்கள் அரண்மனைக்குத் திரும்பி, நடந்த சம்பவத்தை ஸ்ரீ கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.அசாதாரணமான ராட்சத பல்லியை பற்றி கேள்விப்பட்டதும், ஸ்ரீ கிருஷ்ணர் கிணற்றுக்கு வந்து தனது இடது கையால் பல்லியை சிரமமின்றி வெளியே எடுத்தார். அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, ஸ்ரீ கிருஷ்ணர் அதைத் தொட்டவுடன், பல்லி ஒரு தெய்வீக மனிதனாக மாறுகிறது. திடீர் மாற்றத்தால் கவரப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர், அந்த மனிதரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார். கடந்த காலத்தின் எந்தத் தவறுகள் உங்களை இவ்வளவு பெரிய வடிவத்திற்குக் கொண்டு வந்தன? நீங்கள் அத்தகைய விதியைச் சந்திக்க நேர்ந்தது துரதிர்ஷ்டவசமாகத் தெரிகிறது.அந்த தெய்வீக மனிதன் தனது கதையை பணிவுடன் விவரிக்கிறான், "நான் இக்ஷ்வாகு மன்னனின் மகனான நிருகன் என்ற மன்னனாக இருந்தேன். நீங்கள் என்னைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் என்னிடம் கேட்டது போல், நான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற பிராமணர்களையும் புனிதர்களையும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல உயிர் காக்கும் தொண்டு நிறுவனங்களால் கௌரவித்துள்ளேன்"."ஒரு சமயம், ஒரு குறிப்பிட்ட பசுவை ஒரு பிராமணருக்குத் தேவைப்படும்போது, கொடுப்பதற்கு எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அலட்சியத்தால், அதே பசுவை இன்னொரு பிராமணருக்குக் கொடுப்பதாக உறுதியளித்தேன். இரண்டு பிராமணர்களும் என் வீட்டு வாசலுக்கு வந்தபோது, என்னால் ஒரு நியாயமான முடிவை எடுக்க முடியவில்லை. எனவே, பசுவை சர்ச்சையில் விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக, தலா நூறு பசுக்களை ஏற்றுக்கொள்ளும்படி நான் அவர்களிடம் கேட்டேன். பசுவின் அசல் உரிமையாளர் மறுத்து பசுவுடன் நடந்து சென்றார். மற்றொரு பிராமணர் என்னைத் திட்டிவிட்டுச் சென்றார்.""மரணத்திற்குப் பிறகு, நர்காவின் (நரகத்தின்) கடவுளான யமன், நான் எதை முதலில் பெற விரும்புகிறேன் என்பதைத் தேர்ந்தெடுக்கச் சொன்னான் - என் நல்ல செயலின் பலனா அல்லது என் தெரிந்த-தெரியாத கெட்ட செயல்களின் விளைவுகளா? என் கெட்ட செயல்களின் விளைவுகளை முதலில் தாங்கிக் கொள்ளத் தேர்ந்தெடுத்தேன். இதன் விளைவாக, யமன் என்னைக் கீழே போகச் சொன்னான், அதனால் நான் இந்தக் கிணற்றில் விழுந்தேன். விழும்போது, நான் ஒரு பல்லியாக மாறுவதைக் கண்டேன். இதுவரை, என் கடந்த கால வாழ்க்கையை நான் மறக்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் வருகையால் மட்டுமே, நான் என் பரலோக மகிமைக்குத் திரும்பினேன்."மன்னர் நிருகனின் விருப்பத்தை ஸ்ரீ கிருஷ்ணர் நிறைவேற்றினார். பின்னர் மன்னர் ரிகா ஒரு அற்புதமான வான விமானத்தில் ஏறி தெய்வீக வசிப்பிடத்திற்குப் புறப்பட்டார்.மன்னர் நிரிகாவின் கதையிலிருந்து 3 முக்கிய பாடங்கள்நமது வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் மற்றும் நமது செயல்களில் நீதியாக இருத்தல்நல்ல செயல்கள் வெகுமதியுடன் வருகின்றன, கெட்ட செயல்கள் விளைவுகளுடன் வருகின்றன.உச்ச இறைவனின் ஆசீர்வாதங்களைத் தேடி, அவருக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை நடத்துதல்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளின் வழியில் ஆதாயம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல் உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகள் பலிதமாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெண்மை ரிஷபம்தெய்வ சிந்தனை மனதளவில் மேம்படும். தன வருவாயில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிர்பாராத ஆரோக்கியம் சார்ந்த செலவுகள் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு உண்டாகும். மனதில் எதிர்கால சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மிதுனம்விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் இருப்பது நல்லது. எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். முதலீடு சார்ந்த செயல்பாடுகளை தவிர்க்கவும். கல்வி பணிகளில் சிறு சிறு குழப்பம் தோன்றி மறையும். பொறுப்புகள் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு கடகம்குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். துணைவரின் வழியில் மதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். சுபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை சிம்மம்பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தடைப்பட்ட சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் இருப்பவர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தடைகள் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதா கன்னிநினைத்த பணிகளை முடிப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். நவீன யுக்திகளின் மூலம் வியாபாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். சிரமம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு துலாம்நினைத்த சில பணிகள் தாமதமாக முடியும். தாயுடன் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சலுகைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சமூகப் பணிகளில் உயர்வு உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உழைப்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு விருச்சிகம்விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரம் தொடர்பான இடமாற்றம் குறித்த முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும். புதுவிதமான அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும். பிரீதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு தனுசுகுடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும். இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மகரம்அலுவலகத்தில் எதிர்பாராத சில மாற்றம் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். மற்றவர்களின் பொருட்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். ஆசைகள் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை கும்பம்நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகனம் சார்ந்த பயணங்களில் கவனம் வேண்டும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும். பாராட்டு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மீனம்குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பொன், பொருட்களின் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலைத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கைத்தொழிலில் மேன்மை உண்டாகும். தாமதம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18.5.2025.திதி : கிருஷ்ண பக்ஷ சஷ்டி - May 18 05:58 AM – May 19 06:11 AMநட்சத்திரம் : உத்திராடம் - May 17 05:44 PM – May 18 06:52 PM, திருவோணம் - May 18 06:52 PM – May 19 07:29 PMகரணம் : கரசை - May 18 05:58 AM – May 18 06:09 PMவனசை - May 18 06:09 PM – May 19 06:12 AMயோகம் : சுபம் - May 17 07:08 AM – May 18 06:42 AM, சுப்ரம் - May 18 06:42 AM – May 19 05:52 AM,பராம்யம் - May 19 05:52 AM – May 20 04:35 AM
ஓஷோ சொன்ன கதை...ஒரு ஏழை மரவெட்டி காட்டில் உள்ள சின்னஞ்சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். அந்தக் குடிசை மிகமிகச் சிறியது. அவனும் அவன் மனைவியும் மட்டுமே அதில் தூங்க முடியும் அளவே வசதி கொண்டது. ஒரு மழை நாள் நள்ளிரவில் விறகு வெட்டியின் குடிசைக் கதவு ‘தடதட’வென்று தட்டப்பட்டது.விறகு வெட்டி தன் மனைவியிடம், “யாரோ ஒருவன் வழிதவறி காட்டில் மாட்டிக்கொண்டு விட்டான். மழையில் எங்கும் போகவும் முடியாது. விலங்குகள் ஆபத்து வேறு இருக்கிறது. அதனால் கதவைத் திற” என்றான். அவன் மனைவியோ இந்தக் குடிசையில் இன்னொரு மனிதனுக்கு எப்படி இடம் கொடுக்கமுடியும் என்று கேட்டாள்.விறகு வெட்டி சிரித்தான். “இது ராஜ அரண்மனை அல்ல. அங்கேதான் இடப் பற்றாக்குறை இருக்கும். இது ஒரு ஏழையின் குடிசை. இங்கே இரண்டு பேர் வசதியாகத் தூங்க முடியும். மூன்று பேர் வசதியாக அமர்ந்து இருக்க முடியும். கதவைத் திற” என்றான்.கதவு திறக்கப்பட்டது. வந்த மனிதன் விறகு வெட்டிக்கும் அவன் மனைவிக்கும் நன்றி சொல்லி அமர்ந்தான். அவர்கள் சேர்ந்து அமர்ந்து கதைகளைச் சொல்லிப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தபோது கதவைத் தட்டும் சத்தம் மீண்டும் கேட்டது. கதவடியில் உட்கார்ந்திருந்த விருந்தினன், இன்னொருவருக்கு இடமில்லையே என்றான்.விறகு வெட்டியோ, “இதைத்தான் நீங்கள் முன்பு வரும்போதும் என் மனைவி கூறினாள். அவளது சொல்லைக் கேட்டிருந்தால் நீங்கள் குடிசைக்குள் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது. மூன்று பேர் சௌகரியமாக அமர்வதற்கு இடம் இருந்தால் நான்காம் நபருக்கும் கொஞ்சம் இடம் இருக்கத்தான் செய்யும்” என்று சொல்லி கதவைத் திறக்கச் சொன்னான்.தற்போது அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்திருந்தனர். ஒரு அங்குலம் அளவு கூட இடமில்லை. மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஆனால் அது ஒரு மனிதனுடையதைப் போல இல்லை. இப்போதும் விறகுவெட்டி கதவைத் திறப்பானோ என்று இரண்டு விருந்தினர்களுக்கும் அச்சம்.விறகுவெட்டியோ, “கதவைத் திறங்கள். அது என்னுடைய கழுதைதான். இவ்வளவு பெரிய உலகில் அது ஒன்றுதான் எனது நண்பன். நான் தினசரி வெட்டிக்கொண்டு வரும் விறகுகளைச் சுமக்கும் உயிர் அது. வெளியே கடும் மழை பெய்கிறது. என் நண்பனை வரவேற்போம்” என்றான்.விறகு வெட்டியின் மனைவி உட்பட எல்லாரும் கதவைத் திறப்பதை எதிர்த்தனர். “கழுதை உள்ளே வந்தால் அது எங்கே நிற்கும். உனது குடிசையில் இப்படி மாட்டிக்கொண்டிருப்பதை விட மழையிலேயே நின்றுகொண்டிருந்திருக்கலாம்” என்றனர்.“இது ஒரு ஏழையின் குடிசை. அது எப்போதும் வசதியானதே. தற்போது நாம் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம். கழுதை வந்தால் நாம் எல்லாரும் நிற்போம். அவ்வளவுதான்” என்றான்.கழுதையும் குடிசைக்குள் வந்தது. மழை நீர் அதன் ரோமம் முழுவதும் வடிந்துகொண்டிருக்க, விறகு வெட்டி அதைக் குடிசை நடுவில் கொண்டுவந்து நிறுத்தினான். எல்லாரும் அதைச் சுற்றி நின்றார்கள்.“எனது கழுதை ஆத்மஞானியைப் போன்றது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். அது ஒருபோதும் தொந்தரவுக்குள்ளாகாது. அது நீங்கள் அமைதியாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும்.” என்றான் விறகு வெட்டி.
இனப்படுகொலை செய்யபட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் வடகிழக்கு வாழ் தமிழர்கள் தேசமாக திரள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தயாபரன் லகிர்தர் தெரிவித்தார்முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் ஏற்பாடுகளில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 2009 ஆம் ஆண்டுஇறுதி யுத்தத்தில் இனப்படுகொலை செய்யபட்ட இந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் நாளைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்வதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக வருகை தந்துள்ளோம்.நாளையுடன் எமது இனம் இனப்படுகொலை செய்யபட்டு 16 ஆண்டுகள் நிறைவடைகின்றது .தமிழ் மக்களாக அனைத்து ஈழத் தமிழர்களுக்கும் வரலாற்று கடமை உள்ளது .எமது இந்த வரலாறு அடுத்த கட்ட சந்ததிக்கு கடத்த படவேண்டும் .சர்வதேச சமூகத்திற்கு தொடர்ச்சியாக எமது வலிகளையும் வடுக்களையும் தொடர்ந்து நாம் கூறவேண்டும் அதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ள உயிர்நீத்த எம் உறவுகளை நினைவு கூறும் நினைவேந்தலில் இளைஞர்களாக, யுவதிகளாக,தந்தையர்களாக ,தாய்மார்களாக,உறவுகளாக ,சமூக அமைப்புக்களாக, மாணவர்களாக தேசமாக முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு வடகிழக்கு தமிழர்கள் திரள வேண்டும்.என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக கேட்டுக்கொள்கிறோம்.இந்த நாளில் களியாட்டஙகளில் கலந்து கொள்வதை தவிர்த்து எமது மண்ணில் எமது தாய் மொழியான தமிழ் மொழியை பேசினார்கள் என்பதற்காக ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.உணர்வுசார்ந்த நிலைபாட்டில் அனைவரும் திரள வேண்டும் ஆகவே முள்ளிவாய்க்கால் மண்ணில் அனைவருடைய வருகையும் அவசியமானது .அது மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அடுத்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பில் ஓர் அங்கமாக இணைந்து செயற்படும் . தொடர்ந்து மாணவர்களாக எமது நினைவேந்தல் சார் பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்
ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பிராமணர் வசித்து வந்தார். ஒரு சடங்கு சடங்கு செய்த பிறகு அவருக்கு ஒரு ஆட்டு பரிசாக வழங்கப்பட்டது. அதன் பிறகு அந்த பிராமணர் தனது வீட்டிற்கு பயணத்தைத் தொடங்கினார். வழியில் ஆட்டை கட்டுப்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க, பிராமணர் ஆட்டைத் தனது தோள்களில் சுமந்து சென்றார். அவர் ஒரு சில தூரம் மட்டுமே சென்றபோது, மூன்று முரடர்கள் பிராமணர் ஆட்டை சுமந்து செல்வதைக் கண்டனர். பிராமணர் அவர்களைக் கவனிக்காதபடி ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் மிகவும் பசியுடன் இருந்தனர், பிராமணர் தனது ஆட்டுடன் தனியாக இருப்பதை அவர்கள் அறிந்தார்கள்.அவர்கள் விவாதிக்கத் தொடங்கினர். முதல் முரடன், "இந்தப் பசியிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம். பிராமணரை ஏமாற்றி ஆட்டைத் திருடிவிட்டால், ஆடு நம் மூவருக்கும் மிகவும் அருமையான உணவைத் தரும். எனக்கு ஒரு திட்டம் இருக்கிறது. நான் சொல்வதைக் கேளுங்கள்" என்று கூறி, மற்ற இருவரின் காதுகளிலும் திட்டத்தைக் கிசுகிசுத்தான்.திட்டத்தின் படி, அவர்கள் பிராமணரின் பின்னால் குனிந்தனர். முதல் முரடன் பிராமணரின் பாதையில் நின்றான். பிராமணர் தனது தோளில் ஆட்டுடன் அவரை அணுகியபோது, அவர் அவரிடம், "ஓ புனித பிராமணரே, நீங்கள் உங்கள் தோளில் ஒரு நாயை சுமந்து செல்வதை நான் காண்கிறேன். உங்களைப் போன்ற ஒரு பக்தியுள்ள நபர் ஏன் தனது தோளில் ஒரு நாயை சுமந்து செல்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் பிராமணர் மிகவும் கோபமடைந்து, "உனக்கு கண்கள் இல்லையா? நாய்க்கும் ஆட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உன்னால் பார்க்க முடியவில்லையா?" என்று பதிலளித்தார்.பின்னர் திருடன் தான் தனது பங்கை ஆற்றியதாக நினைத்து அவனிடம், "மன்னிக்கவும், ஐயா, ஆனால் நான் என் கண்களால் பார்ப்பதை மட்டுமே சொல்கிறேன். தெளிவாக, உயர் கல்வி கற்றவராக இருப்பது எல்லாம் இல்லை" என்று கூறினான். பிராமணர் தனது பேச்சைக் கேட்பதை உறுதிசெய்து கொண்டு, முரடன் முணுமுணுத்தான்.அந்த பிராமணர் தனது பயணத்தைத் தொடர்ந்தார், அந்த மனிதனின் முட்டாள்தனத்திற்காக அவரை சபித்தார். ஆனால் அவர் சிறிது தூரம் சென்றதும், இரண்டாவது முரடன் அவரை அணுகினார். பின்னர் அவர் பிராமணரிடம், "மதிப்பிற்குரிய ஐயா, நீங்கள் எவ்வளவு முட்டாள்! இந்த இறந்த கன்றை உங்கள் தோளில் எப்படி சுமக்க முடியும்? ஒரு பிராமணர் இறந்த விலங்கை சுமப்பது அவமானகரமானதல்லவா?" என்று கூறினார். பிராமணர் கோபமடைந்து அவரை நோக்கி, "சற்று முன்பு நான் சந்தித்த மற்றொரு முட்டாள் மனிதனைப் போலவே நீங்களும் குருட்டு மனமுள்ளவரா? அது ஒரு ஆடு, இறந்த கன்று அல்ல என்று உங்களுக்குத் தெரியவில்லையா?" முரடன் அப்பாவியாக நடித்தார். அவர் பிராமணரிடம், "என்னை மன்னியுங்கள் ஐயா. நான் பார்ப்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று கத்தினார்.பிராமணர் இப்போது கொஞ்சம் குழப்பமடைந்தார். அது உண்மையில் ஒரு ஆடுதானா என்பதை உறுதிப்படுத்த அவர் விலங்கைப் பார்த்தார். பிராமணர் இன்னும் சிறிது தூரம் சென்றிருந்தார். சிறிது நேரத்தில், திட்டமிட்டபடி, மூன்றாவது முரடன் தோன்றி, "நீ ஒரு உண்மையான பிராமணனா?" என்று கேட்டான். பிராமணர், "ஆம், நான் தான். அது என்ன கேள்வி?" முரடன், "ஒரு புனிதமான மனிதன் எப்படி இவ்வளவு வெட்கக்கேடான செயலைச் செய்ய முடியும்? பன்றியை உன் தோள்களில் சுமக்க உனக்கு எவ்வளவு தைரியம்? உன்னைப் போன்ற புனிதமான ஒருவர் இந்த விலங்கைத் தொடக்கூடக் கூடாது, அதை உன் தோள்களில் சுமப்பது ஒருபுறம் இருக்கட்டும். யாராவது இதைச் செய்வதைப் பார்ப்பதற்கு முன்பு அதை கீழே போடு!" என்று கத்தினார்.இந்த முறை, பிராமணர் பதட்டமடைந்தார். வழியில் சந்தித்த ஒவ்வொருவரும் தனது தோள்களில் வெவ்வேறு விலங்கைக் கண்டனர். முதல் நபர் ஒரு நாயையும், இரண்டாவது நபர் இறந்த கன்றையும், இப்போது ஒரு பன்றியையும் பார்த்தார். அவர் ஒரு ஆட்டைச் சுமந்து செல்வதை மூன்று நபர்களும் எப்படிப் பார்க்க முடியாது? அவர் ஒரு உருவத்தை மாற்றும் பூதத்தை சுமந்து கொண்டிருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார், அது எப்போதும் வடிவம் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு அரக்கனைத் தோள்களில் சுமந்து செல்வதை நினைத்த மாத்திரத்தில் பிராமணரின் முகம் வெளிறியது. உயிருக்கு பயந்து, அவர் ஆட்டை கீழே போட்டுவிட்டு, முடிந்தவரை வேகமாக வீட்டிற்கு ஓடினார்.அந்த முரடர்கள் ஆட்டைத் தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ஆட்டைக் கொன்று அதன் இறைச்சியை விருந்து வைத்தனர்.கதையின் நீதி என்னவென்றால்:திரும்பத் திரும்பப் பேசப்படும் பொய் உண்மையாகத் தோன்றும்.
ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பிராமணர் வசித்து வந்தார். ஒரு சடங்கு சடங்கு செய்த பிறகு அவருக்கு ஒரு ஆட்டு பரிசாக வழங்கப்பட்டது. அதன் பிறகு அந்த பிராமணர் தனது வீட்டிற்கு பயணத்தைத் தொடங்கினார். வழியில் ஆட்டை கட்டுப்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க, பிராமணர் ஆட்டைத் தனது தோள்களில் சுமந்து சென்றார். அவர் ஒரு சில தூரம் மட்டுமே சென்றபோது, மூன்று முரடர்கள் பிராமணர் ஆட்டை சுமந்து செல்வதைக் கண்டனர். பிராமணர் அவர்களைக் கவனிக்காதபடி ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் மிகவும் பசியுடன் இருந்தனர், பிராமணர் தனது ஆட்டுடன் தனியாக இருப்பதை அவர்கள் அறிந்தார்கள்.அவர்கள் விவாதிக்கத் தொடங்கினர். முதல் முரடன், "இந்தப் பசியிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம். பிராமணரை ஏமாற்றி ஆட்டைத் திருடிவிட்டால், ஆடு நம் மூவருக்கும் மிகவும் அருமையான உணவைத் தரும். எனக்கு ஒரு திட்டம் இருக்கிறது. நான் சொல்வதைக் கேளுங்கள்" என்று கூறி, மற்ற இருவரின் காதுகளிலும் திட்டத்தைக் கிசுகிசுத்தான்.திட்டத்தின் படி, அவர்கள் பிராமணரின் பின்னால் குனிந்தனர். முதல் முரடன் பிராமணரின் பாதையில் நின்றான். பிராமணர் தனது தோளில் ஆட்டுடன் அவரை அணுகியபோது, அவர் அவரிடம், "ஓ புனித பிராமணரே, நீங்கள் உங்கள் தோளில் ஒரு நாயை சுமந்து செல்வதை நான் காண்கிறேன். உங்களைப் போன்ற ஒரு பக்தியுள்ள நபர் ஏன் தனது தோளில் ஒரு நாயை சுமந்து செல்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் பிராமணர் மிகவும் கோபமடைந்து, "உனக்கு கண்கள் இல்லையா? நாய்க்கும் ஆட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உன்னால் பார்க்க முடியவில்லையா?" என்று பதிலளித்தார்.பின்னர் திருடன் தான் தனது பங்கை ஆற்றியதாக நினைத்து அவனிடம், "மன்னிக்கவும், ஐயா, ஆனால் நான் என் கண்களால் பார்ப்பதை மட்டுமே சொல்கிறேன். தெளிவாக, உயர் கல்வி கற்றவராக இருப்பது எல்லாம் இல்லை" என்று கூறினான். பிராமணர் தனது பேச்சைக் கேட்பதை உறுதிசெய்து கொண்டு, முரடன் முணுமுணுத்தான்.அந்த பிராமணர் தனது பயணத்தைத் தொடர்ந்தார், அந்த மனிதனின் முட்டாள்தனத்திற்காக அவரை சபித்தார். ஆனால் அவர் சிறிது தூரம் சென்றதும், இரண்டாவது முரடன் அவரை அணுகினார். பின்னர் அவர் பிராமணரிடம், "மதிப்பிற்குரிய ஐயா, நீங்கள் எவ்வளவு முட்டாள்! இந்த இறந்த கன்றை உங்கள் தோளில் எப்படி சுமக்க முடியும்? ஒரு பிராமணர் இறந்த விலங்கை சுமப்பது அவமானகரமானதல்லவா?" என்று கூறினார். பிராமணர் கோபமடைந்து அவரை நோக்கி, "சற்று முன்பு நான் சந்தித்த மற்றொரு முட்டாள் மனிதனைப் போலவே நீங்களும் குருட்டு மனமுள்ளவரா? அது ஒரு ஆடு, இறந்த கன்று அல்ல என்று உங்களுக்குத் தெரியவில்லையா?" முரடன் அப்பாவியாக நடித்தார். அவர் பிராமணரிடம், "என்னை மன்னியுங்கள் ஐயா. நான் பார்ப்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று கத்தினார்.பிராமணர் இப்போது கொஞ்சம் குழப்பமடைந்தார். அது உண்மையில் ஒரு ஆடுதானா என்பதை உறுதிப்படுத்த அவர் விலங்கைப் பார்த்தார். பிராமணர் இன்னும் சிறிது தூரம் சென்றிருந்தார். சிறிது நேரத்தில், திட்டமிட்டபடி, மூன்றாவது முரடன் தோன்றி, "நீ ஒரு உண்மையான பிராமணனா?" என்று கேட்டான். பிராமணர், "ஆம், நான் தான். அது என்ன கேள்வி?" முரடன், "ஒரு புனிதமான மனிதன் எப்படி இவ்வளவு வெட்கக்கேடான செயலைச் செய்ய முடியும்? பன்றியை உன் தோள்களில் சுமக்க உனக்கு எவ்வளவு தைரியம்? உன்னைப் போன்ற புனிதமான ஒருவர் இந்த விலங்கைத் தொடக்கூடக் கூடாது, அதை உன் தோள்களில் சுமப்பது ஒருபுறம் இருக்கட்டும். யாராவது இதைச் செய்வதைப் பார்ப்பதற்கு முன்பு அதை கீழே போடு!" என்று கத்தினார்.இந்த முறை, பிராமணர் பதட்டமடைந்தார். வழியில் சந்தித்த ஒவ்வொருவரும் தனது தோள்களில் வெவ்வேறு விலங்கைக் கண்டனர். முதல் நபர் ஒரு நாயையும், இரண்டாவது நபர் இறந்த கன்றையும், இப்போது ஒரு பன்றியையும் பார்த்தார். அவர் ஒரு ஆட்டைச் சுமந்து செல்வதை மூன்று நபர்களும் எப்படிப் பார்க்க முடியாது? அவர் ஒரு உருவத்தை மாற்றும் பூதத்தை சுமந்து கொண்டிருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார், அது எப்போதும் வடிவம் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு அரக்கனைத் தோள்களில் சுமந்து செல்வதை நினைத்த மாத்திரத்தில் பிராமணரின் முகம் வெளிறியது. உயிருக்கு பயந்து, அவர் ஆட்டை கீழே போட்டுவிட்டு, முடிந்தவரை வேகமாக வீட்டிற்கு ஓடினார்.அந்த முரடர்கள் ஆட்டைத் தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ஆட்டைக் கொன்று அதன் இறைச்சியை விருந்து வைத்தனர்.கதையின் நீதி என்னவென்றால்:திரும்பத் திரும்பப் பேசப்படும் பொய் உண்மையாகத் தோன்றும்.
மூலநோய் நோய் குணமாக என்னென்ன உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் முன்னோர்கள் கூறியுள்ளார் என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம். 1. துத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம். 2. கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம். 3. பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம். 4. முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 5. கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.6. தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும்.7. வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும். 8. கோழிக்கறி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.9. இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 10. நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம் மற்றும் வாழைப்பழம் உண்ண வேண்டும்.
மாம்பழம் ருசிகரமானது. ஆனால், அதை அதிகமாகச் சாப்பிட்டால் கலோரிகள் கூடும். எனவே, ஒரு நாளுக்கு ஒரு மாம்பழம் சாப்பிடலாம். மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்க உதவுகிறது. இதனால் இடைச்சிறு உணவுகள் குறையும்.மாம்பழம் இனிப்பானது என்றாலும், அதில் உள்ள நார்ச்சத்து, சர்க்கரையை சீராக வெளியிடும். பழமாக சாப்பிடுவதுதான் சிறந்தது, ஜூஸ் வேண்டாம்.மாம்பழம் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. குறைந்த கலோரி கொண்டதால், உடலை சோர்வில்லாமல் வைத்து எடையை கட்டுப்படுத்த உதவும்.உடல் எடையை குறைக்க ஆசைப்படுபவர்கள், உணவிலிருந்து பழங்களை தவிர்க்க வேண்டாம். பருவத்திற்கு ஏற்ற பழங்களை சீராக சேர்த்துக்கொள்வதே சீரான ஆரோக்கியத்திற்கு வழி.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்த போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை உறுதி செய்ய அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன் பணியாற்றி வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். மேலும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தங்களின் கடமைகளை நிறைவேற்ற அனைத்து தரப்பையும் அவர் வலியுறுத்தினார்.இரண்டு நாள் பாகிஸ்தான் பயணத்தின் இறுதி நாளில் சர்வதேச ஊடகத்திடம் பேசிய டேவிட் லாம்மி கூறுகையில், “நீடித்த போர் நிறுத்தம் ஏற்படுவதற்கும், பேச்சுவார்த்தை நடப்பதை உறுதி செய்வதற்கும், இந்தியா - பாகிஸ்தான் இடையே நம்பிக்கை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்குவதற்கும் அமெரிக்காவுடன் இணைந்து நாங்களும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அனைத்து தரப்பினரும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தங்களின் கடமையை நிறைவேற்றிட நாங்கள் வலியுறுத்துவோம்.பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து பிரிட்டன் தொடர்ந்து போராடும். பயங்கரவாதம் அந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பிராந்தியத்துக்கும் ஒரு பெரும் களங்கம். இந்தியா பாகிஸ்தான் இரண்டும் நீண்ட வரலாற்றினைக் கொண்ட அண்டை நாடுகள். ஆனால் இந்தக் கடந்த காலத்தினால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாத அண்டை நாடுகள். இனி இவர்களுக்குள் மோதல் ஏற்படக் கூடாது என்பதையும், போர்நிறுத்தம் நீடிப்பதையும் உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்." என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கூறினார்.
டொரண்டோவில் உள்ள ஸ்கார்பரோ பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் ஓர்டன் பார்க் சாலை அருகே இரவு 12:52 மணியளவில் நடைபெற்றது. 19 வயதுடைய ஒரு இளைஞர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை எனவும், காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. பொலிஸார் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உலக நாடுகளை பெரும் அதளபாதாளத்திற்குள் தள்ளிய கொரோனா வைரஸ் மீண்டும் சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்ற, சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மீண்டும் வந்துள்ளது. 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஹாங்காங் நகரில் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக அந்நகரின் சுகாதார பாதுகாப்பு மைய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இம்மாதத்தின் முதல் வாரத்தில் தொற்று எண்ணிக்கை ஒரு வருடத்தில் அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும் மாதிரிகளில் தொற்று உறுதியாவது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் மக்கள்தொகை அதிகம் உள்ள சிங்கப்பூரிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக எடுத்த கணக்கெடுப்பின்படி கோவிட்-19 தொற்று எண்ணிக்கை சுமார் 14,200 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள ராயல் என்ஃபீல்டு, தனது முதல் மின்சார பைக்கான 'ஃப்ளையிங் ஃப்லி (Fling Flea) என்ற மாடலை பெங்களூருவில் அறிமுகம் செய்துள்ளது. ‘சிட்டி பிளஸ்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த பைக், நகரங்களில் பயணிக்க ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய மாடல், முன்னேற்றமடைந்த தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் கலவையாக உருவாகியுள்ளது. FF.C6 எனப்படும் இந்த பைக், ரெட்ரோ ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பைக் முன்புறம் கிர்டர் ஃபோர்க் சஸ்பென்ஷன், துல்லியமான அலுமினியம் பொருட்கள், சிறப்பான மட்கார்டு ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வாகனத்தின் கையாளும் வசதியும், திடத்தன்மையும் அதிகரிக்கிறது.அதிக கவனத்தை ஈர்க்கும் வகையில் பேட்டரி பகுதியில் டைனமிக் ஃபின் வடிவமைப்பு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. Qualcomm Snapdragon QWM2290 எனும் சிப்செட்டால் இயங்கும் இயந்திரம் இதில் உள்ளது. இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட சொந்த சிஸ்டம் ஆகும். விற்பனை மற்றும் விலை பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரியம் மற்றும் புதிய டெக் அம்சங்களை இணைத்த இந்த மின்பைக், இளம் தலைமுறையை ஈர்க்கும் வகையில் தயாராகியுள்ளது.
முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக அமைய வேண்டும் என்று இன்று(18.05.2025) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், உப்பு மாபியாவிற்கும் முடிவு கட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.மேலும், "முள்ளிவாய்க்கால் அவலம் நினைவு கூரப்பட்டு வருகின்றது. 2009 ஆண்டு இதே காலப் பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்கால் அவலம் காரணமாக ஆயிரக்கணக்கான எமது மக்கள் உயிரிழந்திருந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூருவதும் அவர்களுக்கான பிரார்த்னைகளை முன்னனெடுப்பதும் யாராலும் விமர்சிக்கப்பட முடியாதது. அதேபோன்று அந்த பேரவலம் தொடர்பாக அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட வேண்டும் என்பதற்காக முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்வேறு இடங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது.இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகள், எமது இனத்தின் எதிர்காலத்திற்கான படிப்பினைகளாக அமைய வேண்டும். இவ்வாறான அவலங்கள் எவ்வாறு இடம்பெற்றன? இந்த அவலத்தை தடுப்பதற்கான முயற்சிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன? முள்ளிவாய்க்கால் பேரவலத்தை எம்மால் தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா? போன்ற கேள்விகளுக்கு சுயவிமர்சன அடிப்படையில், பதில்களை கண்டறிந்து அவற்றையும் எமது அடுத்த சந்திக்கு கடத்துவதன் மூலம், எதிர்காலத்தில் எமது மக்கள் இந்த மண்ணில் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை உறுதிப்படுத்த முடியும்.ஆனால், முள்ளிவாய்க்கால் அவலம் போன்ற நிகழ்வுகள், சில தரப்புக்களினால் தங்களின் குறுகிய அரசயல் நலன்களுக்கும் சுய விளம்பரத்திற்கும் பயன்படுத்தப்படுவது வேதனையான விடயம். இதனை மக்கள் புரிந்து கொண்டு இவ்வாறான நிகழ்வுகளை அறிவுசார்ந்து சிந்தித்து புத்திசாதுர்யமாக கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதேபோன்று, யுத்தம் நிறைவடைந்த சூழலில் ஆனையிறவு உப்பளத்தினை மீளச் செயற்படுத்துவதற்கான முயற்சிகளை அப்போது பாரம்பரிய சிறுகைத்தொழில் முயற்சி அமைச்சராக இருந்த எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்திருந்தார். அவரின் முயற்சியினால் வடக்கின் வசந்தம் செயற்றிட்டத்தின் ஊடாக 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டு வேலைகள ஆரம்பிக்கப்பட்டிருந்தன. எனினும், 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரே ஆனையிறவில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு, மாந்தை போன்ற பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பதனிடப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வநதது.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பை ஆனையிறவிலேயே பதனிடுவதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வேலைகள் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எனினும், புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், அதுவரையில் ஆனையிறவில் பதனிடல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை கடந்த சில தினங்களாக ஆனையிறவு உப்பு உற்பத்தியில் ஈடுபடும் பணியாளர்கள், தமக்கு தொடர்ச்சியாக தொழில் வழங்கப்படுவதில்லை எனவும், அடிப்படை உரிமைகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.ஆகவே, உப்பை பதனிடுவதற்காக புதிதாக பொருத்தப்பட்ட பதனிடும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டமை, வாரம் முழுவதும் உப்பு உற்பத்தியில் ஈடுவதற்கான சூழல் இருக்கின்ற போதிலும், பணியாளர்களின் வேலை நாட்கள் மட்டுப்படுத்தல் போன்ற செயற்பாடுகளின் பின்னணியில் உப்பு மாபியா செயற்படுகின்றதோ என்ற பாரிய சந்தேகம் உருவிகியுள்ள நிலையில், அவை தொடர்பாக உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்" என்று தெரிவித்துள்ளார்