நகைச்சுவைகள்
Category Jokes - நகைச்சுவை நிகழ்ச்சிகள்
வாழ்தல் இனிது.... ரசித்து வாழ்தல் வரம்
கொலைப் பசியோடு ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்திருந்தேன்.முதலில் பேப்பர் ரோலை உருட்டினார்கள் .பின்பு இலைகளை முன்னே வைத்து சென்றார்கள்.கால் மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் மட்டும் வைத்தார்கள்.முதல் பந்தியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் தி.நகர் போன்று கூட்டம் நெறிய ஆரம்பித்தது.நான் ஓர வரிசையில் அமர்ந்திருந்தேன். காத்திருப்பவர்கள் எனக்கு பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள் ." வெறும் எலைய எம்மா நேரம்டா உத்து பாக்கறது .. சோத்த போடுங்கடா.." சரக்கிலிருந்த பெருசு ஒன்று ஆரம்பித்து வைத்தது .குலாப் ஜாமூன் , வெங்காய பச்சடி , உருளை சிப்ஸ் , வைத்த அடுத்த நொடியில் கபளீகரம் செய்தேன்.என்னுடைய வரிசையில் கடைசி ஆள் வரை வைத்துவிட்டு திரும்பிய வெங்காய பச்சடிக்காரன் என்னைப் பார்த்து " பச்சடியைக் கூடவடா ..?" என்று ம
பட்டிமன்றத்தில் சுவையான பேச்சு....
ஒரு பட்டிமன்றத்தில்  ஒருவர் பேசினார். நடுவரைப் பார்த்துச் சொன்னார்."எது நமக்குத் தெரியாததோ, அதை எது நமக்குத் தெரிய வைக்குதோ... அது நமக்குத் தெரியாமயேதான் இருக்கும்.... "நடுவர் புரியாமல் விழித்தார். அறிவொளி ஐயா விளக்கினார்."நடுவர் அவர்களே, உங்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு இது தெரிகின்றதா?" என்று ஒரு பேனாவைக் காட்டினார்.நடுவர், "இல்லை" என்றார்."சரி, இப்பொழுது உங்கள் கண்களைத் திறங்கள். இப்பொழுது இது என்னவென்று தெரிகின்றதா?""தெரிகின்றது. அது ஒரு பேனா.""உங்களுக்குத் தெரியாமல் இருந்த இந்தப் பேனாவை உங்களுக்குத் தெரிய வைத்தது எது?""என் கண்கள்.""உங்கள் கண்கள் உங்களுக்குத் தெரிகின்றதா?""இல்லை.""அதான் சொன்னேன், எது உங்களுக்குத் தெரியாததோ, அதை எது உங்களுக்குத் தெரிய வைக்குத