Albums
Ads
Updated Albums

தீபாவளி திருநாள்

தீபாவளி திருநாளில் தீபாவளி  நல்வாழ்த்துக்கள்.

May 18 Tamil Genocide Remembrance Day

  •  · 
  •  · tpsenthur
May 18 Tamil Genocide Remembrance Day photos

Chinese foods

  •  · 
  •  · tpsenthur

Stay Green

Stay Green

Covid-19

Corona Virus and people
25-29
Ads
Popular Cameras
Added a news 
பொதுமக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய மற்றும் அடிப்படையான விசயங்களுக்கு, முன்னுரிமை கொடுத்து செயல்படும் நாடுகளின் மத்தியில் பிரான்ஸ் அரசு வித்தியாசம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.பிரான்சில் வசிக்கும் மக்களில் 25 வயது வரையிலான அனைவருக்கும் இலவச காண்டம் வழங்கப்படும் என்பதே அரசின் அந்த அறிவிப்பு. இதுபற்றி அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறும்போது, 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மருந்தகங்களில் இருந்து இலவச காண்டங்களை பெற்று கொள்ளலாம். இந்த நடைமுறை வருகிற புது வருடத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். ஜனவரி 1-ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என கூறினார். ஆனால், அவரது இந்த அறிவிப்புக்கு சிலர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். அது என்ன 18 வயது என்ற அளவீடு? அதற்கு கீழுள்ள வயதினருக்கு இந்த அறிவிப்பு என்னவானது? என்பன போன்று சமூக ஊடகங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால், மக்கள் எதிர்ப்பை புரிந்து கொண்டு, இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது என அதிபர் கூறியுள்ளார். இதனால், 25 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து நபர்களுக்கும் இனி இலவச காண்டம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அதிபர் மேக்ரான் கூறும்போது, பாலியல் உறவில் மைனர் வயதில் உள்ளவர்களும் நிறைய பேர் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் அல்லவா? அதனாலேயே இந்த முடிவு என கூறியுள்ளார். இதனால் பிரான்சில் உள்ள மருந்து கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது என கூறப்படுகிறது.
  • 25
Good Morning....
  • 55
Added a news 
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயது 61 என எடுத்த தீர்மானத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்தும் காலம் தாழ்த்திக்கொண்டிருக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.பாராளுமன்றம் இன்று (9) வெள்ளிக்கிழமை காலை 9,30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
  • 102
Added a news 
பாராளுமன்றில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு கட்டில், மெத்தை மற்றும் கதிரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியது. குறித்த பொருட்கள் தனியார் நிறுவனம் ஒன்றினால் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் புத்திக பத்திரண பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.இது தொடர்பான ஆவணங்களை சபையில் சமர்ப்பித்த அவர், இருவர் தூங்கக்கூடிய கட்டில் - மெத்தை மற்றும் கதிரைகள் ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.தனியார் நிறுவனத்தினால் இந்த பொருட்கள் எதற்காக வழங்கப்பட்டன என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தப்படும் என்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார். 
  • 102
Added article 
நடிகை பூஜா ஹெக்டேவும் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மலர்ந்துள்ளதாகவும் இப்போது இவருவம் ஒன்றாக நேரத்தை செலவிடுவதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது. எனினும் பூஜா ஹெக்டே மற்றும் சல்மான் கான் தரப்பில் இது குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • 102