Added news
கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்காக அடுத்த மாத நடுப்பகுதி தொடக்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.ஒக்ஸ்போர்ட் பல்கலைகழத்தின் தடுப்பூசி பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இதேவேளை பைஸர் மற்றும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழக தடுப்பூசிகளை ஏற்றுவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Info