Feed Item
Added a news 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக சுமார் 20 பயிற்றப்பட்ட மோப்ப நாய்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வான்படை இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இது தொடர்பான அணிவகுப்பு கடந்த 13ஆம் திகதி வான்படை தளபதி எயார் மார்சல் சுதர்சன பத்திரனவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த செயற்பாடுகளுக்காக 5 பெல்ஜியன் மாலிநோய்ஸ், 5 லெப்ரேடர் ரெட்ரீரவர்ஸ், 5 ஜேர்மன் செபேர்ட்ஸ் மற்றும் 5 இங்லீஸ் ஸ்பிரிங்கர் ஸ்பெய்ன்ல்ஸ் ஆகிய மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த மோப்ப நாய்களுக்கு போதைவஸ்துக்களை இனங்காணுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் வான்படையில் 1972ஆம் ஆண்டு முதல் மோப்பநாய் பிரிவு செயற்பட்டு வருகிறது.

இதன் ஒருக்கட்டமாக 1985ஆம் ஆண்டு 12 மோப்பநாய்கள் வான்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

1998இல் 17 மோப்பநாய்கள் சேர்க்கப்பட்டன. 2006ஆம் ஆண்டில் 12ம், 2013இல் 10 நாய்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன

  • 767