Added news
அரசினால் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபட பணிகள் புதன்கிழமை (13) ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக கட்டட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை பிரிவினரால் நில அளவுத்திட்ட பிரமாணங்கள் போன்றன கணிக்கப்பட்டன.இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபியை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என துணைவேந்தர் தெரிவித்தார்.
Comments
Info