Feed Item
Added news 
அநுராதபுரத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  அநுராதபுரம் அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளுக்கே இந்த கொடுமை நடந்துள்ளது.இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதான விடுதி கண்காணிப்பாளர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.இது தொடர்பில் சிறுவர் இல்லத்திலிருந்த 50 சிறுவர்களிடமிருந்து பொலிசார் அறிக்கை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.அத்துடன் குறித்த சிறுவர் இல்லத்தில் குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பில் ஏராளம் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் அனுராதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • View
Comments
Info