Feed Item
Added a post 

ரசிகர்கள் என்னதான் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், அரசியலுக்கு வரப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று கடந்த வருட டிசம்பர் இறுதியில் திடீரென அறிவித்தார். டிசம்பர் 3ம் திகதி அரசியலுக்கு வருவதாகக் கூறிய ரஜினி உடல்நிலையை காரணம் காட்டி திடீரென இந்த முடிவை அறிவித்தார்.  இந்த நிலையில் வெறுத்துப் போன ரசிகர்கள், நேற்றுமுன்தினம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் ரஜினி நேரடியாக இந்தப் போராட்டம் பற்றி ரசிகர்களுக்கு எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை. பதிலும் சொல்லவில்லை.

ஆனால் நேற்றுக் காலை ரஜினி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது:

“என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களே… நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும் மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள், இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன், நான் என் முடிவை கூறி விட்டேன். தயவு கூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”.

 இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

  • View
Comments
Info