Added news
இலங்கையில் இன்று 283 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 568 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்றில் இருந்து மேலும் 766 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 91 பேர்.
தொற்று உறுதியானவர்களில் 7 ஆயிரத்து 105 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 603 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 232 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Info