Feed Item
Added a news 

மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தும் அளவிற்கு வங்குரோத்து நிலைக்குச் சென்ற நல்லாட்சி அரசாங்கம் தன்னால் இயன்ற அளவிற்கு கடன்களை பெற்றுக் கொண்டதே தவிர அதன் மூலம் செய்தது ஒன்றும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (25) தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய விமான ஓடுதளம் மற்றும் ஓடுபாதையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பூரண நிதி அனுசரணையின் கீழ் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முழு ஆதரவுடன் புதிய விமான ஓடுதளம் மற்றும் ஓடுபாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் துரிதப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அடிக்கல் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டமாகும். நல்லாட்சி அரசாங்கம் இத்திட்டத்தை முற்றாக நிறுத்தியிருந்தது. அதன்படி, இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது 48 விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • 532