Feed Item
Added a news 

பெரும் போகத்துக்கான உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கின்ற இதே நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகளை  வழங்குவதற்கு ஒருபோதும் பின்னிற்காது என கிராம பிரதேச அபிவிருத்தி  வீட்டு விலங்கின  வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் நாட்டை கட்டியெழுப்பும் சுபிட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத் திட்டமிடலுக்கேற்ப பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரின் வழிகாட்டலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உளுந்து மற்றும் பயறு பயிர் செய்கை திட்டத்தின் கீழ் விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று பகல் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்அரசாங்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருபோதும் கைவிடாது நாட்டின் ஜனாதிபதி ஒரு நல்ல நோக்கத்தோடு சேதன உரம் தொடர்பான விடயத்தை கையிலெடுத்து இருந்தது.  இது ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே மக்களுக்காக அரசாங்கம் என்ற கொள்கைக்கு அமைவாக இத்திட்டத்தை முன்னெடுத்திருந்தது.  அமைச்சர்கள் பிரதமர் ஜனாதிபதி தற்போது இராசயன உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அனுமதித்திருக்கிறது.  ஆகவே ஏற்கனவே விவசாயத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பெரும் போகத்தில் இவ்வாறான ஒரு வாய்ப்பை வழங்கிய அரசாங்கம் இதுபோன்று பாதிக்கப்படும் விவசாயிகளை ஒருபோதும் கைவிடாது என்றும் தெரிவித்தார்.மக்கள் தலைவர்கள் எங்கள் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்வது இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சிந்திக்கவேண்டும்.குறிப்பாக தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று சொன்னவர்கள் இன்று அரசியலில் இருந்து காணாமல் போயிருக்கின்றார்கள் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரே பல அரசியல்வாதிகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.நாங்கள் அப்படியல்ல யுத்தத்தின் வலிகளை அனுபவித்தோம் பெண் தலைமைத்துவ குடும்பத்துக்கு என்ன திட்டம் எங்களிடம் உள்ளது; மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன திட்டம் உள்ளது சலுகைகளுக்காக விலை போக மாட்டோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கம் பாராளுமன்றத்தில் வழங்கும் சகல சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டே இவ்வாறான கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • 509