Feed Item
Added a news 

கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு  இன்று (24-11-2021) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணகளில் உழுந்து - பயறு பயிர் செய்கை திட்டத்தின் கீழ்  8 மில்லியன் ரூபா பெறுமதியான விதை தாணியப் பொதிகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாட்டை கட்டியெழுப்பும் சுபிட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத் திட்டமிடலுக்கேற்ப பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரின் வழிகாட்டலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உளுந்து மற்றும் பயறு பயிர் செய்கை திட்டத்தின் கீழ் மேற்படி விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று பகல் நடைபெற்றுள்ளது.

மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஒழுங்கு படுத்தலில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் அமைச்சின் செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கரைச்சி கண்டாவளை பிரதேச செயலாளர்கள் மாவட்ட விவசாயிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த விதை தாணிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 501