Feed Item
Added a news 

பீடைகொல்லி பதிவாளர் கலாநிதி ஜே. ஏ. சுமித்தை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

7 வருடங்களாக தடை செய்யப்பட்டிருந்த கிளைபோசேட் உள்ளிட்ட ஐந்து வகையான பீடைகொல்லி வகைகளுக்கான தடையை நீக்கி நேற்று வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலே இதற்குக் காரணம். இதன்படி, பீடைகொல்லி பதிவாளரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியாகாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட பீடைகொல்லிப் பதிவாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையொன்று மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1894/4 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட சில வகையான பீடைகொல்லிகள் தொடர்பான விதிகள் இரத்துச் செய்யப்படுவதாக பீடைகொல்லிப் பதிவாளர் கலாநிதி ஜே. ஏ. சுமித் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 555