Feed Item
Added a news 

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அனுசரணையுடன் படகுக்கான இயந்திரம் மற்றும் பாதுகாப்பு அங்கிகள் என்பன 557 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜெயவர்த்தன அவர்களிடம் அரசாங்க அதிபர் அவர்கள் இன்றையதினம் கையளித்தார்.ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துவருகின்ற கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்படுகின்ற பிரதேசங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களிற்கு கொண்டு செல்கின்ற பணியானது பாதுகாப்பு படையினர் மற்றும் கடற்படையினரின் உதவியுடனேயே மேற்கொள்ளப்படுகின்றது. இதனை அடிப்படையாக கொண்டு மாவட்டத்தில் 57 வது படைப்பிரிவின் கீழ் தேடுதல் பாதுகாப்புக் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினை பலப்படுத்தும் நோக்குடன் அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் மேற்படி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.   அனர்த்த நிலைமைகளின் போது செயற்பட தயாராகியுள்ள இக்குழுவானது நான்கு படகுகள் மற்றும் அதனோடு இணைந்த உபகரணத்தொகுதியுடன் 20 ற்கும் மேற்பட்ட படையினரை கொண்டதாக மீட்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு செயற்பட தயார்நிலையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,571படைப்பிரிவின் தளபதி,  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர், மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

  • 682