Feed Item
Added article 

ஹாலிவுட், பாலிவுட் , கோலிவுட் என எங்கு சென்றாலும் தனுஷ் படங்கள்தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். பல இயக்குநருக்கு வாய்ப்பும் கொடுத்து வருகிறார்.

ராட்சசன் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் ராம்குமார். இவர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. தனுஷிடம் படத்தின் கதையை பற்றி கூறியுள்ளார். ஆனால் தனுஷ் இப்படத்தின் கதை ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தில் பார்த்தது போலவே இருக்கிறது என வெளிப்படையாக இயக்குனரிடம் கூறியுள்ளார்.

தனுஷ் தன்னுடன் பணியாற்றும் சினிமா பிரபலங்களிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது இந்த கதை எங்கேயாவது பார்த்த மாதிரி உங்களுக்கு தோன்றுகிறதா என ராம்குமார் கூறிய கதையை கூறியுள்ளார். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் இந்த  கதை எந்த படத்தின் சாயலில் இருக்கிறது என கண்டறிந்து தனுஷிடம் கூறியுள்ளனர்.

தனுஷ் இயக்குனர் ராம்குமாரிடம் நீங்க சொன்ன கதை இந்த படத்தின் சாயலில் இருக்கிறது. அதனால் கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். மூன்று வருடமாக கதையை எழுதி வந்த ராம்குமாருக்கு தனுஷ் இந்த மாதிரி கூறியது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேறொரு படத்தின் சாயலில் இருக்கும் கதையில் நடித்தால் தனுஷ்க்கு வரவேற்பு இருக்காது என்பதால்தான் இயக்குனரிடம் படத்தின் கதையை ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள் என கூறியதாக தனுஷ் நண்பர்கள் கூறியுள்ளனர்.  

இயக்குனர் ராம்குமார் மூன்று வருடமாக எழுதிய கதையை மாற்றங்கள் செய்ய விருப்பம் இல்லாததால் இந்த கதைக்கு யார் சம்மதிக்கிறார்கள் என யோசித்து சிவகார்த்திகேயனிடம் படத்தின் கதையை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இப்போது வரை சிவகார்த்திகேயன் ராம்குமார் படத்தினை பற்றி எந்த ஒரு தகவலையும் கூறவில்லை.

  • 391