Feed Item
Added article 

பாடலாசிரியர் சினேகனுக்கு வருகிற ஜூலை 29-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் நடிகை கன்னிகாவை திருமணம் செய்ய உள்ளார். ‘தேவராட்டம்’ படத்தில் நடித்துள்ள நடிகை கன்னிகா, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். 

வருகிற 29-ம்  தேதி சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் வைத்து சினேகன்- கன்னிகா திருமணம் நடைபெற உள்ளது. அன்று காலை 10.45 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும், மக்கள் கட்சி நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

  • 577