Feed Item
Added article 

பைக்கின் மீது தீராத காதல் கொண்ட அஜித் பிரம்மாண்ட டெர்மினேட்டர் பைக்கில் அழகாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். அஜித்குமார் பைக் ஓட்டும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கின்றன.

வலிமை அப்டேட்டிற்காக தல ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தொடர்ந்து மகிழ்ச்சியான செய்திகள் வெளியாகி வருகின்றன. வலிமை அப்டேட் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது தல அஜித் பைக் டிரிப் சென்ற புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

அஜித்குமார் இருசக்கர வாகனத்தில் வெகு தொலைவு செல்வது வழக்கமான ஒன்று. அவ்வாறு சிக்கிமிற்கு சென்றபோது தான் இந்த புகைப்படங்கள் வெளியாகின என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அஜித் பயன்படுத்தியிருப்பது பிஎம்டபிள்யூ ஆர்1200 ஜிஎஸ் அட்வென்ஜர் பைக் ஆகும். இந்த பைக் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை.

இந்தியாவில் இதனை விற்பனை செய்யும் பொழுது மூன்றுவித மாடல்களில் விற்பனை செய்யப்பட்டது. மூன்று மாடல்களிலும் 1170 சிசி இன்ஜின்தான் பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 125 பிஎஸ் பவரையும்,125 என்எம் டார்க் திறனையும் உருவாக்க வல்லது.

இந்த பைக் ஒரு லிட்டருக்கு 16 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்க கூடியது. இந்த பைக்கின் ஆரம்ப விலை 17.25 லட்ச ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 21.30 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைக்கேட்ட தல ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்துள்ளனர்.

  • 322