Feed Item
Added a post 

கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்அதாவது பூனகரி மன்னார் வீதியின் ஆலடிச் சந்தியில் இருந்து c-035 பாதையூடாக செல்லும் போது 14 கிலோமீற்றர் தொலைவில் இவ் ஆலயம் அமைந்துள்ளது.

இவ் ஆலயத்திற்கு செல்லும் வழியில் பளிச் என்ற வெள்ளை மணல் மேடுகள் ஆங்காங்கே வெண்ணிற ஆடைகளில் காட்சிதரும் தேவதைகள் போன்றுள்ளன. அத்தோடு அங்கே காணப்படுகின்ற கண்டல் தாவரங்களும், பனைகளும் பரந்தசிறு கடல் பரப்புக்களும் மேலும் அழகு சேர்க்கின்றன.இவ்வாறு இயற்கை அழக்கினை மெருகூட்டுகின்ற இடங்களை கடந்தே நாங்கள் இத் தொன்மை வாய்ந்த சிவாலயத்திற்கு செல்லப் போகின்றோம்கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் தொன்மையான சுற்றுலா அடையாளமாகக் கூட இவ் ஆலயம் அமைந்திருக்கு இவ் ஆலயத்தின் சிறப்பு பற்றி பார்ப்போமானால்இது சோழர் காலத்து சிவன் ஆலயம் என வரலாறுகள் குறித்து நிற்கின்றன. இந்த ஆலயம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைகழக வரலாற்று பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் குறித்த ஆலயமானது கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர் அநுராதபுர அரசை வெற்றிக்கொண்டு 77 ஆண்டுகள் இலங்கையில் ஆட்சி புரிவதற்கு முன்னர் அவர்களின் ஆதிக்கமும், அரச தலைநகரங்கள் சிலவும் வட இலங்கையில் இருந்துள்ளதை இப்பிராந்தியத்திலுள்ள சோழர்கால தொல்லியற் சான்றுகள் உறுதி செய்கின்றன எனவும் அதற்கு மண்ணித்தலை சிவன் ஆலயம் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிடுகின்றார்.வட இலங்கையில் இது வரை கண்டு பிடிக்கப்ட்ட ஆலயங்களுள் ஓரளவு ஆலயத்தின் கலை மரபை அறியக்கூடிய பழமையாக இதைக் கருதலாம்கோறல் கல் செங்கல் சுதை என்பனவற்றைக்கொண்டு அமைக்கப்பட்ட இவ் ஆலயம் 21 அடி நீளத்தையும் 12 1/2 அடி அகலத்தையும் 03 தளங்களைக் கொண்ட 7 அடி உயரமான விமானத்தையும் கொண்ட ஆலயமாகும் இதன் தேவ கோஸ்டங்கள் கர்ணக்க்கூடுகள் குதம் சாலை பஞ்சரம் என அப்படியே முற்படட சோழர் மரபை ஒத்ததாக உள்ளனஇலங்கை தொல்லியல் திணைக்களம் இவ் ஆலயத்தை இலங்கையின் தேசிய மரவுரிமை சின்னமாக பிரகடனப்படுத்த தீர்மத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதுஇவைதான் வவ் ஆலயத்தின் சிறப்பமசமாக காணப்படுகின்றது.

  • 756