Feed Item
Added a news 

சிறுமி இஷாலினி ஜுட்டின் மரணத்தில் மறைந்திருக்கும் சந்தேகங்களைக் களைந்து உண்மையை துலங்கச் செய்ய வேண்டும்.

நுவரெலிய டயகம பகுதியைச் சேர்ந்த இஷாலினி ஜுட்குமார் என்ற 16 வயதுச் சிறுமி கடந்த மூன்றாம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இல்லத்தில் தீக் காயங்களுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இருந்தமை உடற்கூறு பரிசோதனை வாயிலாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அச்சிறுமியின் மரணம் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் மறைந்துள்ள மர்மங்கள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.

இது தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி உண்மையை வெளிக் கொணர்ந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு பாதுகாப்பு தரப்பின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக் கூற வேண்டிய மக்கள் பிரதிநிதி ஒருவரின் வீட்டில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது பணிப்பெண்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்கு உட்படுத்துகிறது. இது கண்டிக்கப்பட வேண்டியது. மக்கள் இதற்காக நிச்சயம் ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

  • 734