Feed Item

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய கிணற்றில் நீர் பொங்கி வழிகிறது. இன்று அதிகாலை  இதனை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ மு.அங்குசசர்மா தெரிவித்துள்ளார். 

பின்னர்  சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் ஆலயம் நோக்கி படையெடுத்துச் சென்று கிணற்றைப் பார்வையிட்டுள்ளனர். அவ்விடத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தமையால், ஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் மக்களைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

  • View
Comments