Feed Item
Added article 

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது

இந்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்யிட்டு 3 ஆம் முறை 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனவே விரைவில் மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

அதேபோல், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு முதன் முதலாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் நடிகர் உதயநிதி .

இந்நிலையில், நடிகர் உதயநிதியிடம் இனிமேல் நீங்கள் அரசியலா? சினிமாவா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அரசியல் வேறு சினிமா வேறு. அரசியலில் நாம் எம்.எல்.ஏ ஆகத் தேர்வானது மக்களுக்குச் சேவை செய்ய எனத் தெரிவித்தார். ஆனால் நான் நடிக்க ஒப்புக்கொண்ட 2 படங்களிலும், இன்னும் ஒரு படத்திலும் நடிக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதனால் ஒழுங்காகத் தொகுதிக்குச் சென்று வேலையைப்பார் என்று தனது தந்தை மு.க.ஸ்டாலின் அட்வைஸ் செய்ததாகக் கூறியுள்ளார்.

  • 733