Feed Item

இலங்கையில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 702 ஆகவும், பலி எண்ணிக்கை 7 ஆகவும் உள்ளது . கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 172 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளருக்கு மீளவும் கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்ததாக வீட்டுக்கு அனுப்பட்ட நபர் ஒருவர் மீள அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்ட சம்பவம் ஜா - எல பகுதியில் பதிவாகியுள்ளது.கடந்த மார்ச் 17 ஆம் திகதி குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர் அங்கொடை தொற்று நோய்த் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஒரு மாத காலம் சிகிச்சையளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 17 ஆம் திகதி அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.வீட்டில் தனிமைப்படுத்தல் ஈடுபட்டுள்ள நிலையில், நெஞ்சு வலி சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றார் . பரிசோதனைகளின் போதே அவருக்கு கொரோனா தொற்று மீள உறுதி
செய்யப்பட்டது.

  • View
Comments