Feed Item
Added a news 

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. எனவே தொற்று வெகுவேகமாக பரவி, தொற்று எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. கொரோனா பரவலுக்கு பிரசார கூட்டங்களும் காரணமாய் அமைந்தன. எனவே மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்று மக்கள் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:


* தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப். 10 முதல் தடை விதிக்கப்படுகிறது.


* திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.


* தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.


* இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.


* பொழுது போக்கு பூங்கா, வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி.


* கல்வி, சமுதாய, பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகளில், உள் அரங்குகளில் 200 நபருக்கு மட்டும் அனுமதி.


* வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்.


* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி

* சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு.


* பேருந்து இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.


* உணவகங்கள் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.


* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர்களுக்கு மட்டுமே அனுமதி.

  • 612