Feed Item
Added a news 

முதலை போன்ற தோற்றம். 'மகர’ என்றால் முதலை. இந்த ஆசனத்தின் உச்சநிலையில் உடல் முதலை போன்று தோற்றத்தைத் தரும்.

செய்முறை :

குப்புறப்படுத்து இரு கைகளையும் தலைக்கு மேல் நேராக நீட்டவும். உள்ளங்கைகள் தரையின் மீது இருக்கட்டும். முகவாய் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க, கால்கள் இணைந்து உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்கட்டும். தலை முதல் கால் வரை ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும்.

குதிகால்கள் இரண்டு ஒன்றையொன்று நோக்கியபடி, கால்களை அகட்டி வைத்துக் கொள்ளவும். கால்கள் வெளிப்புறம் நோக்கி இருக்கவேண்டும். வலது கையை மடக்கி உள்ளங்கையை இடது தோளின் மீது வைக்கவும். இதேபோன்று இடது கையை மடக்கி உள்ளங்கையை வலது தோளின் மீது வைக்கவும்.

முகவாயை இரண்டு முன் கைகளும் சேரும் இடத்தின் மீது வைக்கவும். இதே நிலையில் சிறிது நேரம் இருக்கவும். இடது உள்ளங்கையை விலக்கி இடது கையை நீட்டவும். இதே போன்று வலது உள்ளங்கையை விலக்கி வலது கையை நீட்டி பழைய நிலைக்கு வரவும்.

4 நிமிடங்கள் இந்த பயிற்சியில் ஈடுபடலாம்.

பலன்கள்: 

உடல் முழுவதற்கும் நல்ல ஓய்வைத் தரும். அதிக ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன இறுக்கம் போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல பயிற்சி இது.

இந்த ஆசனத்தில் கழுத்து, முதுகெலும்புகள், தசைகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய முடியும்.

வயிற்றில் இருக்கும் தசைகள் ஓய்வடைந்து ஜீரண சக்தி அதிகரிக்கிறது.

மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

மூச்சை இழுத்து விடும்போது, வயிறு மேலும் கீழும் அசையும்போது, முதுகுக்கும் இடுப்புக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது.

ஆஸ்துமா, மூச்சிறைப்பு உள்ளவர்களுக்கு, இது மிக நல்ல ஆசனம்.

  • 538