Feed Item
Added a post 
மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் கடலில் அடித்த புயலில் இறந்து விட்டார்.
அவரது மகனுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ஒருவர், இறந்தவரின் மகன் கடலுக்கு மீன் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார்.
அப்போதும் கடலில் புயல் உருவாகிக் கொண்டிருந்தது. ஏம்ப்பா, உனது தந்தை இப்படியொரு புயலில் தான் இறந்தார்,
மறுபடியும் கடலுக்குள் போகிறாயே? என்று கேட்டார் அவர்.
அதனால் என்ன, எனது தாத்தா கூடக் கடலில் மீன் பிடித்த போது தான் இறந்தார்,
அதன் பின்னும் எனது தந்தை மீன் பிடிக்கச் செல்லவில்லையா?
சரி, அய்யா..உங்கள் தாத்தா எப்படி இறந்தார்? எனக் கேட்டார் மீனவர் மகன்.
படுக்கையில் தூங்கும் போது அவரது உயிர் பிரிந்தது.
உங்களின் அப்பா எப்படி இறந்தார் என்று மீனவர் மகன் மீண்டும் கேட்க,
அவரும் அப்படித் தான். படுக்கையில் தூக்கத்தில் இறந்தார் என்றார்.
ஐயா பெரியவரே, உங்களின் தாத்தாவும் சரி, அப்பாவும் சரி படுக்கையிலே இறந்து விட்டனர்,
அதன் பிறகு எப்படி நீங்கள் துணிச்சலாகத் தூங்கப் போகிறீர்கள்? என்று கேள்வியால் மடக்கினார் மீனவர் மகன்.
நாம் எல்லோரும் நம் மனதில் ஏதோ ஒருவிதமான நம்பிக்கையுடன் தான் வாழ்ந்து வருகின்றோம்..
நம்பிக்கை இல்லாவிட்டால் நாம் வாழவே முடியாது என்பது தானே உண்மை ?
இரவில் நிம்மதியாக தூங்கப் போகின்றோம், நாளை கண்டிப்பாக தூக்கத்திலிருந்து விழிப்போம் என்கின்ற நம்பிக்கையில்.
நம்பிக்கையின்மையை எப்பொழுதும் நாம் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும்.
எந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது.
  • 125