Feed Item

சுழிபுரம் முதியோர் இல்லத்தில்ஒரு மகிழ்வான மதிய பொழுது!அமரர் சிவகிருஷ்ணராஜா ஞாபகார்த்தமாகவும் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டும் அவரது புதல்வர் கொமர்சியல் வங்கியின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரும் நிர்வாக இயக்குநருமாகிய லயன் எஸ்.ரங்கநாதனின் நிதி அனுசரணையில் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினரால் சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லத்தில் ஒரு பொன்னான மதியப் பொழுது நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவர் லயன் க.டினேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகத்தின் செயலாளர் லயன் சி.ஹரிகரன், கழகத்தின் லண்டன் வாழ் உறுப்பினர்களாகிய லயன் ம.பிரிதுவிராஜ் - லயன் பி.பவித்திரா தம்பதிகளுடன் கழகத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் லயன் செ.விஜயராஜூம் கலந்துகொண்டனர்.மனமார்ந்த நன்றிகள் எம் அன்புக்குரிய லயன் எஸ்.ரங்கநாதன்

  • 103