Feed Item
Added a news 

பிழையான ஜனாதிபதியை தெரிவு செய்தமையால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து நாடு சீருக்கு திரும்ப 5 ஆண்டுகளாவது செல்லும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கருணா அம்மான் படையணி என புதிய இளைஞர் அணி ஒன்றை உருவாக்கியுள்ளோம். காரணம் அடுத்து வரும் காலம் இணைஞர்கள் கையில் கொடுக்க வேண்டும். இன்று எமது பாராளுமன்ற உறுப்பினர்களை தூக்கி சென்று பாராளுமன்றத்தில் அமர்த்த வே்ணடும்.

நடக்க முடியாத நிலையில் பாராளுமன்றம் சென்று எவ்வாறு எமக்கு சேவை செய்யப்புாகின்றார்கள். இந்த நிலையில் இளைஞர்கள் கையில் அடுத்த காலம் செல்ல வேண்டும். அதற்காகவே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து பயணிக்கின்றோம்.

யுத்தத்தின் வலிகள், பாதிப்புக்கள் எனக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. நானும் எனக்கான அண்ணன் ஒருவரை யுத்தத்தில் பறி கொடுத்துள்ளேன். அவ்வாறு நீ்களும் உறவுகளையும், அங்கங்களையும் இழந்து இன்றும் மாறாத வடுக்களுடன் வாழ்கின்றீர்கள்.

தொடர்ந்தும் கடந்த காலங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை. அவ்வாறு பெசுவதென்றால் நிறைய பேசக்கூடியதாக இருக்கும். அவற்றை விட்டுவிட்டு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

  • 286