Added a news
அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த தனியார் பஸ்ஸின் பின் சக்கரங்கள் இரண்டும் கழன்று விழுந்ததில் விபத்து சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நேற்று (23) மாலை தொடங்கொட மற்றும் வெலிபென்ன நுழைவாயில்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்திலேயே விபத்து இடம்பெற்றதாகவும், அதிக அளவில் பயணிகள் பஸ்ஸில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பஸ்ஸின் முன்பக்க இரண்டு சக்கரங்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டன.
இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 444