Added a news
20.09.2022. செலான்நெல்லியடி கிளை ஊடாக செலான்பவிரசர. Pahasara நூலக செயற்திட்டத்தின் கீழ் பருத்தித் துறை மேல் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நூலகமானது புனரமைக்கப்பட்டு பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. தளபாடங்கள் மடிக்கணனிகள் புத்தகங்கள் மற்றும் இதர திருத்த வேலைகளுக்கான ரூபா400.000.ற்கும் அதிகமான தொகையை இதற்காக செலவிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. சத்தியபாலன், செலான் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் திரு.நிர்மலன், கிளை முகாமையாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர், ஆலோசகர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டார்கள், வடமராட்சி கல்வி வலயத்தில் செலான் வங்கி நெல்லியடி கிளையினால் திறந்து வைக்கப்பட்டது. 9. வது.நூலகம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- 215
Comments
Info