Feed Item
Added a news 

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர் பாசன குளமான இரணைமடுக்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களின் கீழும் சிறுபோக செய்கைகள் நிறைவு பெற்று காலப்போக பயிர் செய்கை முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் 2022 . 2023 க்கான காலப்போக பயிர்செய்கை தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் விதத்தில் கலந்துரையாடல் ஒன்று முந்தைய நாள் (22-09-2022) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலுக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 16க்கும் மேற்பட்ட திணைக்களங்களுக்கான கடிதங்கள் திட்ட முகாமையாளரின் கையொப்பத்துடன் (21-09-2022) பகல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதாவது, நேற்றைய தினம் நடைபெற வேண்டிய கலந்துரையாடலுக்கு திட்ட முகாமையாளரால் முந்தைய  தினம் பகல் குறித்த கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டதுடன் 2022-2023 ஆண்டுக்கான பெரும் போகசெய்கை தொடர்பில் கலந்துரையாட வேண்டிய நிலையில் இரணை மடுக்குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பிலான கலந்துரையாடல் என கடிதங்கள் அனுப்பட்டிருந்தன.

இக்கடிதம் தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன் விவசாயிகள் மத்தியிலும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றதன் தொடர்சியாக இவ்வாறு உயர் அதிகாரிகள் தவறான கடிதம் ஒன்றை இன்றைய தினம் நடைபெற இருக்கின்ற கலந்துரையாடலுக்கு நேற்றைய தினம் கடிதத்தை அனுப்பி இருந்தமையானது; மாவட்டத்தின் உயர்நிலை அதிகாரிகள் மட்டத்தில் இருக்கின்ற குறைபாடுகளைகுறைபாடுகளின் வெளிப்பாடாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 227