Feed Item
Added article 

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வரும் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை படக்குழுவினர் நாடு முழுவதும் சுற்றி புரோமோஷன் செய்து வருகின்றனர். 


 

இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் நாளை தேவராளன் என்ற மற்றொரு சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் புரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


 

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


  • 123
Comments
Info