Feed Item
Added a news 

அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமையினால் 9 வீதமான விசேட வைத்தியர்கள் இந்த வருட இறுதிக்குள் ஓய்வு பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று (22) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, விசேட வைத்தியர்கள் குழுவொன்று ஒரேயடியாக ஓய்வு பெறுவதனால் சுகாதாரத்துறையின் முகாமைத்துவம் மற்றும் சேவைகளை வழங்குவதில் சிக்கல் நிலை உருவாகலாம் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், இது இளம் மருத்துவர்களுக்கு சாதகமான பின்னணியை உருவாக்கும் என குறிப்பிட்டார்.

  • 210
Comments
Info