Feed Item
Added a news 

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 கிராமப்புற பாடசாலைகளில் கல்விகற்கும் 700 மாணவர்களிற்கு குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.கடந்த காலங்களில் சர்வதேச மற்றும் ஊள்ளுர் தொண்டு நிறுவனங்கள் ஊடாக மாணவர்களிற்கு மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. எனினும் குறித்த திட்டத்திற்கான காலம் நிறைவடைந்த நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டது.இந்த நிலையில், தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக மக்களிற்கன அன்றாட உணவு தேவை பூர்த்தி செய்யப்படுவது தொடர்பில் கணிப்பிடப்பட்டது.இந்த நிலையில். கிராமப்புறங்களில் உள்ள பல குடும்பங்கள் நாளாந்த உணவை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், மாணவர்கள் பாடசாலைக்கு செல்கின்றமை தொடர்பில் கணிப்பில் கண்டறியப்பட்டது.இந்த நிலையில், தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகளில் கல்வி கற்கும் 700 மாணவர்களிற்கு பாடசாலை நாட்களில் மதிய உணவினை வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.குறித்த ஆரம்ப நிகழ்வானது கிளிநொச்சி சிவபாத கலையகம் அரசினர் தமிழக் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.வரதீஸ்வரன், கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் பி. கமலராஜன், கரைச்சி பிரதேச செயலாளர் பி ஜெயகரன், இலங்கை அனைத்துலக மருத்துவநல அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி எஸ்.கிருஸ்ணகுமார் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது விருந்தினர்கள் வரவேற்கப்பட்டது, பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விழா மண்டபம் வரை அழைத்து செல்லப்பட்டு, மங்கள விளக்கேற்றப்பட்டது, தொடர்ந்து குறித்த வேலைத்திடடத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 400