Feed Item
Added a news 

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பி.ஏ ஜயகாந்த நியமிக்கப்பட்டுள்ளார். சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டிருந்த நிலையில் அவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற இவர் களனிப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 303