Feed Item
Added a news 

குறித்த நிகழ்வு நேற்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்டச்செயலக தொழிற்பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.இலங்கையின் விவசாயத் துறையில் சேதனப் பசளையை அதிகளவில் பயன்படுத்துவதை முனைப்பாகக் கொண்டு செயற்படும் நிலையில், சேதனப் பசளை உற்பத்திக்கு நாட்டில் பாரிய தேவை ஏற்பட்டுள்ளது.கிராமப்புற பிரதேசங்களில் உயர்தர சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் புதிய திட்டமொன்றை பெரெண்டினா நிறுவனம்தொடங்கிய நிலையில், குறித்த திட்டத்தின் முதற் கட்டமாக முப்பத்தியொரு 31 புதிய சேதனப் பசளைஉற்பத்தி வியாபாரங்கள் நிறுவப்படவுள்ளன.இதற்கமைய, 31 தொழில்முனைவோருக்கு துண்டாக்கும் இயந்திரங்கள் (Shredder Machines) மற்றும் பசளை பொதிசெய்யும் இயந்திரங்கள்(Bag Closer Machines) என்பன நன்கொடையாக வழங்கப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவருக்கு 3 லட்சம் பெறுமதியான இயந்திரம் இன்று குறித்த நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • 332