Feed Item
Added a news 

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் ஆதரவை இழந்ததை அடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கோடையில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைக்கான போட்டி நடைபெறும். பின்னர் அக்டோபரில் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுவரையில் போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிக்க வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதாவது இலையுதிர் காலம் வரை, அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை போரிஸ் ஜான்சன் பதவியில் நீடிப்பார் என ஏதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர்.

இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்து உள்ளனர்.

இதை தொடர்ந்து இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.  

  • 480