Feed Item
Added a news 

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள ஒட்சிசன்  சிலிண்டர்களுக்கு ஒட்சிசன் நிரப்பும் இயந்திரப்பகுதியை செயலிழக்கச் செய்யும் நோக்குடன் விசமிகளால் குறித்த இயந்திரத்துக்குள் இரும்புத் துள்கள் போடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.ஒன்றரை லட்சம் இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வரும் மாவட்ட பொது வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்டு வந்த வைத்திய சாலைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர் நிரப்பும் இயந்திரத் தொகுதியை செயலிழக்கச் செய்யும் நோக்குடன் விசமிகளால் குறித்த இயந்திரத்துக்குள் இரும்புத் துகள்கள் போடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்த கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையிலுள்ள குறித்த இயந்திரப்பகுதியானது கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 202017 ஆம் ஆண்டு வரை இயங்காத நிலையில் காணப்பட்டது அக்காலப் பகுதியில் இருந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முயற்சியினால் குறித்த இயந்திரத் தொகுதி சீராக்கப்பட்டு சிலிண்டர்களுக்கான ஒட்சிசன் நிரப்பப்பட்டுவந்துள்ளது இந்த நிலையில் கடந்த 2018 குறித்த இயந்திரத் தொகுதியை செயலிழக்க செய்யும் நோக்கில் இயந்திரத்தின் இயங்கு பகுதிக்குள் விசமிகளால் திட்டமிட்டு மணல் போடப்பட்டு போடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு உடனடியாக திருத்தி அமைக்கப்பட்டிருந்ததுஇவ்வாறு திட்டமிட்டு விஷமத்தனமான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் உடனடியாக குறித்த பகுதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தி அதற்கான காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் இந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி குறித்த இயந்திரத்துக்குள் இரும்பு துகள்கள் போடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.இதனால் தற்போது வைத்திய சாலைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர்களை நிரப்ப முடியாத நிலையில் தற்போது 99 சிலிண்டர்களை நிரப்புவதற்காக அனுராதபுரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது அதாவது தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற எரிபொருள் நெருக்கடி மற்றும் வைத்திய செலவுகளுக்கான நிதி பற்றாக்குறை ஆகிய காணப்படுகின்ற இந்த நிலையில் இவ்வாறு ஒட்சிசன் நிரப்புவதற்காக 99 சிலிண்டர்களும் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனகடந்த 2012 ஆண்டு தொடக்கம்20 17ஆம் ஆண்டு வரையிலும் வெளியிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை நிரப்புவதற்காக சுமார் 53 மில்லியன் ரூபாவுக்குவிற்கும் மேற்பட்ட நிதி செலவிடப்பட்ட நிலையிலேயே குறித்த இயந்திரப் தொகுதி சீரமைக்கப்பட்டு ஒட்சிசன் நிரப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டடு வந்த நிலையில் திட்டமிட்டு சேதமாக்கப்பட்டடுள்ளது.இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு அதற்கான சிசிடிவி ஒலிப்பதிவுகளை வைத்தியசாலை நிர்வாகம் வழங்கவல்லை எனவும் அறியமுடிகின்றது

  • 318