Added a news
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த தகவலை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் லேசாக இருப்பதாகவும், இதனால் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா கொரோனா முதல் அலை ஏற்பட்டபோது சிறப்பாக நிர்வாகம் செய்து, அந்நாட்டை கொரோனாவில் இருந்து மீட்டது குறிப்பிடத்தக்கது.
- 182
Comments
Info