Feed Item
Added article 

சரிகா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதன்பிறகு ஹிந்தி, மராத்தி, தமிழ் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசனை திருமணம் செய்து கொண்டார். 

சரிகாவுக்கு பிறந்தவர்கள்தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன். ஒரு சில காரணங்களால் கமல்ஹாசன், சரிகா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். சரிகா மாடர்ன் லவ் மும்பை என்ற அந்தாலாஜி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஆறு காதல் கதைகள் கொண்ட இந்த அந்தாலாஜி திரைப்படம் அமேசான் திரையில் வெளியாகியுள்ளது. இதில் மை பியூட்டிபுல் ரிங்கில்ஸ் என்ற குறும்படத்தில் சரிகா, கணவனை விபத்தில் பறிகொடுத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 60 வயதான அவருக்கு 30 வயதான இளைஞன் குணால் என்பவருடன் நட்பு ஏற்படுகிறது.

குணால் சரிகாவை காதலிக்கிறேன் என கூறுகிறான். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சரிகா முதலில் குணாலை கண்டித்து அனுப்பிவிடுகிறார். ஆனால் அதன் பிறகு சரிகாவின் மனதுக்குள்ளேயே பல கேள்விகள் எழுகிறது. அதன் பிறகு ஒரு முடிவுக்கு வந்து மீண்டும் குணாலை வீட்டிற்கு அழைக்கிறார்.

சரிகா என்ன முடிவு எடுக்கிறார் என்பதுடன் படம் முடிவடைகிறது. காதலுக்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை இப்படம் உணர்த்துகிறது. தற்போது செய்தித்தாள்களில் இது போன்ற பல செய்திகளை நாம் படிக்கின்றோம். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

இப்படத்தில் சரிகா தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய ஏக்கம், காதல், பரிதவிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பியூட்டிபுல் ரிங்கிலீஷ் குறும்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  • 317