Added news
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் (சனிக்கிழமை) 416 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.இதில், யாழ். மாவட்டத்தில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஐவர் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் உள்ளவர்கள் எனவும் ஏனைய இருவரும் ஜம்புகோளப்பட்டினம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, ஏனைய மூவரில் இருவர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றையவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Info