Feed Item
Added a news 

மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொவிட் தொற்று 24 மணித்தியாலங்களில் 27 பேர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரனாதொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாவட்டத்தில் 27பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர்  நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இதில் காத்தான்குடியில் 11பேரும் ,செங்கலடிசுகாதாரப்பிரிவில் 10பேரும் ,மட்டக்களப்பு சுகாதாரப்பிரிவில் 06பேரும் இனம் காணப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பில் இனம் காணப்பட்டவர்கள்  கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்டத்தில் இதுவரை 467பேர் தொற்றுக்குள்ளாகியபோதிலும் 238பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கிழக்குமாகாணத்தில் கொவிட் தொற்று காரணமாக சிகிச்சைபெறுவோரின் எண்ணிக்கை தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகரித்துக்காணப்படுகின்றது.

குறிப்பாக தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திருமலை 168 ,அம்பாறை 56, கல்முனை 221, மட்டக்களப்பு 238ஆக காணப்படுகின்றது.

  • 812