Cinema
Latest Cinema
இயக்குநர் செழியன் காலமானார்
  •  · 
  •  ·  sivam
திரைபடக் கலை, ஒளிப்​படக் கலை, இசை, எழுத்து எனப் பன்​முகத் திறமை வாய்ந்​தவர் இயக்குநர் செழியன். தனது ‘த பிலிம் ஸ்கூல்’ மூலம் சுயாதீனத் திரைப்​படங்​களை எடுப்பது தொடர்​பாக, திட்​ட​வட்​ட​மான பயிற்​சியை உரு​வாக்​கி, அதற்​கான மாணவர்​களைத் திரட்டி தீவிர​மாக உழைத்​துக் கொண்டிருந்​தார். நிறு​வனங்​கள் செய்​ய​வேண்​டிய பணியை தனிநபராகச் செய்​தார்.புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​டிருந்த செழியன் சிகிச்சை பலனின்றி நேற்​று​ காலை கால​மா​னார்.நாம் தமிழர் கட்​சி​யின் கலை இலக்​கிய பண்​பாட்​டுப் பாசறை​யின் மாநில ஒருங்​கிணைப்​பாள​ரான, ஒளிப்பதிவாளர் செழியனின் உடல் நாம் தமிழர் கட்​சித் தலைமை அலு​வல​கத்​தில், அஞ்சலிக்காக வைக்​கப்​பட்​டது. அங்கு திரைத்​துறை​யினர், பொது​மக்​கள் அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர் போரூர் மின
எம்.ஜி.ஆர். கூறிய வார்த்தையால் நடந்த திருமணம்
  •  · 
  •  ·  sivam
🌹‘கலங்கரை விளக்கம்’ பட ரிலீஸ்… பரபரப்பில் இருந்தபோதிலும் வேலுமணி, ஓர் அதிகாலை நேரம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிற்குச் செல்கிறார் அப்பொழுது எம்.ஜி.ஆர். முண்டா பனியனுக்கு மேலே, மார்பு வரை கட்டிய லுங்கியுடன் தோட்டத்தைச்சுற்றி வாங்கிங் செயது கொண்டிருக்கிறார்.🌹வேலுமணியைப் பார்த்தவுடன், “என்ன முதலாளி! இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கீங்க.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டா?” என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர்.அதற்கு வேலுமணி, “அர்ஜெண்டைவிட, அவசியம் என்பதால்தானே உங்களைப் பார்க்க வந்தேன்….” என்கிறார்.“சொல்லுங்க!”🌹பையன் சரவணன் ஒரு பொண்ணைக்காதலிக்கிறான். அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறான்.”“அப்புறம் என்ன… அவன் ஆசைப்பட்டபடி நடத்தி வச்சுட வேண்டியதுதானே?”“இல்லே.. பொண்ணு ரொம்ப ஏழையாம்! அது மட்டும்மல்லாம: பொ
எம்.ஜி.ஆருடன் பாரதிராஜா
  •  · 
  •  ·  sivam
''நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன். ஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, 'சின்னவர் வருகிறார்... சின்னவர் வருகிறார்... ' என்று பயங்கர பரபரப்பு. அப்போது அலுவலக வளாகத்தில் படகுபோல ப்ளைமவுத் கார் வந்து நின்றது. காரிலிருந்து ஆயிரம் சூரியன் ஜொலிப்போடு குல்லா, கறுப்புக் கண்ணாடியுடன் மல்லிகைச் சிரிப்போடு எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எம்ஜி.ஆர் வந்திறங்கினார். ‘இவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தது, சூரியன் என்றல்லவா பெயர் வைத்திருக்கவேண்டும்’ என்று நினைத்தபடி ஆச்சர்யம் அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். அருகில் வந்ததும் என் கைகள் தன்னிச்சையாக அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டது.ரோஜா மலரின் வாசத
ராஜ்கிரண்
  •  · 
  •  ·  sivam
ஒரு கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வந்திருந்தார் தயாரிப்பாளர் நடிகர் ராஜ்கிரண்.காலையில் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டது. இனி இரவு ரயிலில்தான் சென்னை திரும்ப வேண்டும்.பகல் முழுவதும் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில், தனிமையில் இருந்து கொண்டு என்ன செய்வது ?நேரம் போகாமல் போர் அடித்தது.mஅப்போதுதான் கல்யாணத்துக்கு அவரை மதுரைக்கு அழைத்திருந்த மாப்பிள்ளை இளங்கோ அங்கு வந்தார்."என்ன அண்ணே, ரொம்ப போர் அடிக்கிறதா ?"ஆமா தம்பி.""ராஜ்கிரண்அண்ணே...ஒண்ணு சொல்லட்டுமா ?""என்ன ?""என் ஃபிரண்டு ஒருத்தன் இருக்கான். நல்லா சிரிக்க சிரிக்க பேசுவான்.""அப்படியா ?""ஆமாண்ணே. அவனை உடனே வரச் சொல்றேன். நீங்க அவன்கிட்ட பேசிக்கிட்டு இருங்க. அவன் பேச ஆரம்பிச்சா உங்களுக்கு நேரம் போறதே தெரியாது."ஆச்சரியத்து
பட அதிபர் சின்னப்ப தேவர்
  •  · 
  •  ·  sivam
பட அதிபர் சின்னப்ப தேவர் சிறு வயதிலிருந்தே தெய்வ நம்பிகை யுள்ளவர்.சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர்.மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்க்கையில் கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது.அப்போதும் அவர் நாணயத்தை நேர்மையையும் விட்டதில்லை.குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலைபார்த்தார்.அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும்.அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருதமலைக்குப் போய் ‘முருகா!, முருகா!’ என்று மனம் உருக வேண்டுவார் அந்தக் கோவிலோ அப்போது ஜன நடமாட்டமில்லாத காலம்வெற்றிலை பாக்குக் கடையி
  •  · 
  •  ·  sivam
இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரும், திரைக்கதை மன்னனுமாகிய பாக்யராஜ் கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பல மொழி திரைத்துறையிலிருந்தும் வந்திருந்தார்கள். ஆனால் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஊர்வசி வரவில்லை. அது பெரிய விவாதமானது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார்.பாக்யராஜ் இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அவரது குருநாதர் பாரதிராஜா மறைந்திருந்தார். ஒரே மாதத்தில் இரண்டு ஜாம்பவான்களை இழந்துவிட்டதால் திரைத்துறையினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் சோகத்தின் உச்சத்துக்கு சென்றார்கள். இயக்குநர் இமயத்துக்கு எப்படி சாரை சாரையாக என்று இறுதி மரியாதை செலுத்தினார்களோ; அதேபோல் திரைக்கதை மன
அருண் விஜய்க்கு நாயகியான மிர்ணா
  •  · 
  •  ·  sivam
அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் நாயகியாக மிர்ணா நடித்து வருகிறார்.முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக மிர்ணா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இவர் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.அருண் விஜய் – மிர்ணா இருவரையும் வைத்து பாடலொன்றை படமாக்கி வருகிறார் முத்தையா. இப்படம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு தயாராகி வருகிறது.இப்படத்தினை முடித்துவிட்டு அருண் விஜய் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது முட
தோழி கவுரியை மணந்தார் ஆமிர்கான்
  •  · 
  •  ·  sivam
தனது நீண்ட நாள் தோழி கவுரியை திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.மும்பையில் தனது நீண்ட நாள் தோழியான கவுரியை திருமணம் செய்து கொண்டார் ஆமிர்கான். இந்த திருமணத்தில் ஆமிர்கான் – கவுரி இருவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.சில நாட்களுக்கு முன்பு தனது திருமணம் ஜூலை 5-ம் தேதி நடைபெற இருப்பதை பத்திரிகையாளர்கள் முன்பு ஆமிர்கான் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.ஆமிர்கானுக்கு வயது 60 ஆகிறது. அவர் ரீனா மற்றும் கிரண் ராவ் ஆகியோரை திருமணம் செய்து கொண்டு, விவகாரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 3-வதாக கவுரியை திருமணம் செய்து
ஹீரோக்களுக்கு இஷா கோபிகர் கேள்வி
  •  · 
  •  ·  sivam
இந்தி நடிகையான இஷா கோபிகர், தமிழில் காதல் கவிதை, என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே, ஜோடி, அயலான் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அவர் திரையுலகில் நிலவும் வயது அடிப்படையிலான பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.இது பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: ஆண்களுக்கு வயதானால் அதை அனுபவம் என்கிறார்கள். பெண்களுக்கு வயதானால் அதைப் பிரச்சினை என்கிறார்கள். இது விசித்திரமாக இல்லையா ? முன்னணி நடிகர்கள், தங்களை விடப் பாதி வயதுடைய இளம் பெண்களுடன் ஜோடி சேர்ந்து ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறார்கள். அது மிகவும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், வயதான பிறகும் ஒரு பெண் ஸ்டைலாகவோ, தன் கருத்துகளை வெளிப்படையாகப் பேசினாலோ அல்லது தனது தனித்துவத்தைக் கொண்டாடினால
மீசை முருகேசன்
  •  · 
  •  ·  sivam
விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன பூவே உனக்காக படத்தில் தினமும் இரவில் பாட்டுப் பாடி ஊரையே எழுப்பி விடும் காமெடி வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தான் மீசை முருகேசன். அதற்குமுன்பே பல படங்களில் நடித்திருந்தாலும் பூவே உனக்காக படம்தான் இவருக்கு அடையாளத்தைக் கொடுத்தது. தன்னுடைய முறுக்கு மீசையாலும், வளர்ந்து உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றமும் கொண்டதால் இவருக்கு மீசை முருகேசன் என்ற அடைமொழி வந்தது.மோகன், நதியா நடித்த உயிரே உனக்காக படத்தில் அறிமுகமான மீசை முருகேசன் அடிப்படையில் ஒரு இசைக் கலைஞர் ஆவார். வாய் மூலம் இசைக்கும் மோர்சிங் என்ற இசைக்கருவியை இயற்றுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். மேலும் தவில் வித்வானாகவும் இருந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன் குழுவில் பல்வேறு படங்களில் பணியாற்றி உள்ளார்.இதுமட்டுமல்லாது கே.பி
குஷ்பு மகள் திருமணம்
  •  · 
  •  ·  sivam
நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பூ மற்றும் முன்னணி இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் - ஸ்ரவண் ஸ்ரீனிவாசன் திருமணம், கோவாவில் மிக நெருக்கமான உறவினர்கள் மத்தியில் பிரம்மாண்டமாகவும் அதேசமயம் எளிமையாகவும் நடந்து முடிந்தது. மணமக்களின் விருப்பப்படி மிகவும் எளிமையாக, நெருங்கிய சொந்தங்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் நெகிழ்ச்சியான, எமோஷனலான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.திருமண சடங்குகள் தொடங்குவதற்கு முன்பு குஷ்பூ குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, மணமகன் ஸ்ரவண், அவந்திகாவின் கழுத்தில் தாலி கட்டும் அந்த நொடியில், குஷ்பூ உணர்ச்சிப் பெருக்கால் கைகளைக் கூப்பி கும்பிட்டபடியே ஆனந்தக் கண்ணீர்
த​யாரிப்​பாளரை மணக்​கிறார் நடிகை ஷர்​மிளா மந்த்ரே
  •  · 
  •  ·  sivam
தமிழில், வினய் நடித்த ‘மிரட்​டல்’ படத்​தில் நாயகி​யாக நடித்​தவர் ஷர்​மிளா மந்த்​ரே. கன்​னடத்​தில் சில படங்​களில் நடித்​துள்ள இவர், விமல் நடித்த ‘இவனுக்கு எங்​கேயோ மச்​சம் இருக்​கு’, ‘சண்​டக்​காரி’, தினேஷின் ‘நானும் சிங்​கிள்​தான்’ ஆகிய தமிழ்ப் படங்களைத் தயாரித்​துள்​ளார்.இவருக்​கும் பிரபல தமிழ்ப் பட தயாரிப்​பாளர் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்​தரத்​துக்​கும் திருமண நிச்​சய​தார்த்​தம் நடைபெற்றுள்ளது. பெங்​களூரில் உள்ள நட்​சத்​திர ஓட்​டல் ஒன்​றில் நடை​பெற்ற இந்த விழா​வில் நெருங்​கிய உறவினர்​கள் மட்​டுமே கலந்து கொண்​டனர்.திரு​மணத் தேதி இன்​னும் முடிவு செய்​யப்​பட​வில்லை என்று ஷர்மிளா தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அவர்​களுக்​குக் கன்னட, தமிழ்த் திரைப்​படத் துறை​யினர் வாழ்த்​துகளைத் தெரிவித்த
Latest Cinema (Gallery View)
97-108