Latest Cinema
- ·
- · sivam
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இதனை ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்து வருகிறார்.60களில் மெட்ராஸ் மகாணத்தில் நடைபெற்ற மொழிப்போர் போராட்டம் குறித்த கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ஜி.வ
- ·
- · sivam
நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. விஜயலட்சுமி அவர் மனைவியாக நடித்துள்ளார். கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நவம்பர் 1-ம் தேதி வெளியாகும் இப்படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “குடும்பத்தில் வேறுபட்ட மனநிலையில் இருக்கும் கணவன்- மனைவி பற்றிய படம் இது.முனீஷ்காந்த் - விஜயலட்சுமி கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.முனீஷ்காந்த்துக்கு கிராமத்தில் இடம் வாங்கி வீடு கட்டி நிம்மதியாக வாழ ஆசை. விஜயலட்சுமி நகரத்திலேயே வசதியாக வாழ நினைக்கிறார். இதனாலேயே இருவருக்கும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஒரு சம
- ·
- · sivam
சொந்த ஊரு விளாத்திக்குளம். அப்பா அம்மா கலப்புத்திருமணம் பண்ணிக்கிட்டவங்க. ஜார்க்கு மனைவி, ஒரு பையன், ஒரு பொண்ணுனு சின்னதா ஒரு குடும்பம்.1985-ல பிளஸ் டூ முடிச்சதும், லயோலா காலேஜ்ல பாதிரியார் அகஸ்டின் நடத்துன வீதிநாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். அப்போ கூத்துப்பட்டறை நடத்தின முத்துச்சாமி மாஸ்டர் கேரளாவுல நாடகம் போடுறதுக்கு ஆள் கேட்டிருக்கார். அப்போதான் ஜார்ஜ் மரியான் கூத்துப்பட்டறைக்குள்ள போனார். 1989ல இருந்து 2002 வரைக்கும் கூத்துப்பட்டறையில் 120 நாடகங்கள் வரைக்கும் பண்ணினார். அதுக்குப் பின்னால 2002ல நாசரோட `மாயன்’னு ஒரு படம் மூலமா சின்ன ரோல்ல நடிச்சார், ஜார்ஜ். அந்தப் படத்துலதான் பசுபதி உள்ளிட்ட பல கூத்துப்பட்டறை கலைஞர்கள் நடிச்சிருப்பாங்க.காஞ்சீவரம் படத்தில் பிரியதர்ஷன் கிட்ட அஸிஸ்டெண்டா ஏ எல
- ·
- · sivam
காதலிக்காக எம்.ஜி.ஆர் பாடுவது போல் அமைந்த ஒரு பாடலை, டி.எம்.எஸ்.குரலில் 2 முறை பதிவு செய்துள்ளனர். இதற்கு காரணம் என்ன என்பது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.எம்.ஜி.ஆர், நடிப்பில் வெளியான அன்பே வா திரைப்படத்தில் ஒரு பாடலை பாடிய டி.எம்.எஸ்., டேக் ஓகே என்று சொன்னவுடன், சென்றுவிட, மறுநாள் மீண்டும் அதே பாடலை ரீடேக் பாட சொல்லி தயாரிப்பாளர் ஏ.வி.எம். செட்டியார் சொன்னதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் சார்பில், 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத
- ·
- · sivam
ஜி.எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘தீயவர் குலை நடுங்க’. இதன் படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது. தற்போது நவம்பர் 21-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன.தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிக் பாஸ் அபிராமி, பிரவீன் ராஜா, ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது.ஒளிப்பதிவாளராக சரவணன் அபிமன்யு, இசையமைப்பாளராக பரத் ஆசி
- ·
- · sivam
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காந்தா’. நவம்பர் 14-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.இந்த விழாவில் துல்கர் சல்மான் பேசும் போது, “இக்கதையை 2019ல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை அவ்வளவு ரசிப்பார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக காத்திருந்தேன். எங்கள் எல்லோருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’இருக்கும். ‘அய்யா’ கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான நபராக சமுத்திரக்கனி இருந்தார். எங்களை விட இன்னும் அதிக ஆர்வமாக சமுத்த
- ·
- · sivam
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்து வெளியான படம் ‘ஆர்யன்’. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் முதல் 3 நாட்கள் நன்றாக இருந்தது. மேலும், இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமமும் விற்கப்பட்டு விட்டதால் விஷ்ணு விஷாலுக்கு லாபகரமான படமாகவே ‘ஆர்யன்’ அமைந்தது.இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். இதில் “ஒரு படத்தின் கதையில் நாயகனாக அல்லது தயாரிபபாளராக எதில் தலையிடுவீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஷ்ணு விஷால், “நான் தலையிடாத அனைத்து சினிமாவும் வெற்றியடைவது இல்லை. சினிமாவை பொறுப்புணர்வுடன் பார்க்கிறேன். எனது தயாரிப்பு மட்டுமல்ல, நடிகனாகவும் என்னுடைய பொறுப்பு இருப்பதாக நம்ப
- ·
- · sivam
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என வலம் வந்தவர் கங்கை அமரன். இளையராஜாவின் சகோதரரான இவர், இப்போது முதன்மை பாத்திரத்தில் நடிகராகக் களமிறங்குகிறார்.அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கும் படம், ‘லெனின் பாண்டியன்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன் சில படங்களில் சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டியுள்ள அவர், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு நிமிட வீடியோவில் கங்கை அமரனின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் கிராமத்து முதியவராக துரைராசு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இதையடுத்து நடிகர் சரத்குமார் உள்பட பல திரைபிரபலங்களும்
- ·
- · sivam
பிரபல ஹாலிவுட் நடிகை டயான் லாட் (வயது 89).1950-களில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் லாட், ஹாலிவுட் திரைப்படங்களில் பல வலிமையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியான, `சைனா டவுன்', `கோஸ் ஆப் மிஸிஸிப்பி', `பிரைமரி கலர்ஸ்', `28 டேஸ்', உள்பட பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.‘ஆலிஸ் டஸ் நாட்ன்லிவ் ஹியர் எனிமோர்’, ‘வைல்ட் அட் ஹார்ட்’, ‘ராம்ப்ளிங் ரோஸ்’ ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இருந்தாலும் அவருக்கு கிடைக்கவில்லை. இவர் மகள் லாரா டெர்னும் பிரபல நடிகை ஆவார். `ஒயிட் லைட்னிங்’, ‘வைல்ட் அட் ஹார்ட்', ‘சிட்டிசன் ரூத்’, ‘டாடி அண்ட் தெம்’ போன்ற சில படங்களில் இருவரும் தாய்- மகளாக நடித்தனர்.கலிபோ
- ·
- · sivam
‘காந்தாரா’, ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களை இயக்கி, நாயகனாக நடித்தவர் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் உருவான இப்படங்கள் மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றதால், இந்தியா முழுவதும் பிரபலமானார்.‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். அடுத்து ஜெய் ஹனுமான் என்ற படத்தில் ஹனுமானாக நடிக்க இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதற்கிடையே ‘காந்தாரா’ படத்தை வெறும் பணத்துக்காக மட்டும் உருவாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, “இதுபோன்ற கதையை வெறும் பணத்துக்காக மட்டும் செய்துவிட முடியாது. நான் வேறு கதைகளைத் தேர்வு செய்திருந்தால் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்த்திருப்பேன். ‘காந்தாரா’வை மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக
- ·
- · sivam
பிரபல ஹாலிவுட் மற்றும் பிரெஞ்சு நடிகர் டெக்கி காரியோ (72) புற்றுநோயால் காலமானார்.ஹாலிவுட்டில் வெளியான பேட் பாய்ஸ், நோஸ்ட்ராடாமஸ், த பேட்ரியாட் என பல படங்களில் நடித்துள்ளார். ஜேம்ஸ்பாண்ட் படமான ‘கோல்டன் ஐ’ படத்தில் வில்லனாக நடித்துப் பிரபலமானார். பிரெஞ்சு படங்களான, த மெசஞ்சர், கிஸ் ஆஃப் டிராகன் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்பிரான்ஸின் பிரித்தானியில் வசித்து வந்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
- ·
- · sivam
‘டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான வதந்திகளுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், திட்டமிட்டப்படி படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தினால் இதில் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் பரவின. முன்னதாக சில முறை இப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.’டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று பரவிய வதந்திகளுக்கு படக்குழு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ‘டாக்சிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான விளம்பரப்படுத்தும் பணிகளைத்
Latest Cinema (Gallery View)