Latest Cinema
- ·
- · sivam
தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு கரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இதன் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.அதில், 40 வயதிலும் தனது கனவுகளைத் துரத்தும் சர்வதேசத் துப்பாக்கிச் சுடும் வீரராக, சூர்யா நடித்துள்ளார்.
- ·
- · sivam
துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘கேடி: தி டெவில்’. இதில் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா, நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பிரேம் இயக்கி உள்ள இப்படத்தை கே. வி. என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ளார். அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இப்படம், ஏப் 30-ல் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.இப்படத்தில் இருந்து சமீபத்தில் குத்துப்பாடல் ஒன்று பல்வேறு மொழிகளில் வெளியானது. அப்பாடலில் நோரா ஃபதேஹி, சஞ்சய் தத் இணைந்து ஆடியிருந்தனர். இப்பாடலை இந்தியில் ரகிப் ஆலம் என்பவர் எழுதியுள்ளார். அப்பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே கடும் எ
- ·
- · sivam
சசி – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வந்த படம் ‘நூறு சாமி’. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.
- ·
- · sivam
’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் உடன் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை முடித்துவிட்டு ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கவுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார்.தற்போது இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.இந்த படத்தில் முருகன் மற்றும் விருமாண்டி ஆகிய இரண்டு கடவுள்களை மையப்படுத்தி கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சிவகுமார் முருகேசன். இதில் முருகக் கடவுளை மையப்பட
- ·
- · sivam
நடிகை ராய் லட்சுமி, 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அழகும், திரை முன்னிலையில் கொண்டுவரும் நம்பிக்கையும் காரணமாக கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த 'தாம் தூம்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ராவி மோகன் நடித்த இந்த படத்தின் மூலம் ராய் லட்சுமிக்கு தமிழ் ரசிகர்களிடையே தனி அடையாளம் கிடைத்தது.தமிழ் சினிமாவைத் தொடர்ந்து ராய் லட்சுமி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, காஞ்சனா திரைப்படத்தில் கருப்பு பேரழகா பாடல் மற்றும் கவர்ச்சியான ஆட்டத்தின் மூலம் இளம் ரசிகர்களை வளைத்தப்போட்டார். பின் ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்பு பெற்ற ராய் லட்சுமி, Julie 2 என
- ·
- · sivam
நடிகர் மாதவன் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு குறித்து ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.முன்னணி நடிகர், நடிகைகளின் பெயரில் சமூக வலைதளங்களில் போலியான கணக்குத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. இப்போது நடிகர் மாதவன் பெயரில் மோசடி கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரோஹன்மைரா 2 (rohanmyra2)’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு தனது பெயரையும், தனது குழுவின் பெயரையும் பயன்படுத்தி பொதுமக்களிடம் பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.“இந்த நபருக்கும் எனக்கும் அல்லது எனது குழுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முற்றிலும் ஒரு மோசடி கணக்கு. எனது சார்பாகப் பேச வேறு எந்தக் கணக்குக்கும் அனுமதி இல்லை”
- ·
- · sivam
தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலமாக அறிமுகமாகி, தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் விக்ரம் பிரபு. அதன் பிறகு அவரது ஒவ்வொரு படங்களும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான சிறை என்ற படம் தனி ஒரு அடையாளத்தை கொடுத்தது. சிவாஜி கணேசனின் பேரன், பிரபுவின் மகன் என்கிற அடையாளங்கள் இருந்தாலும், திரையுலகப் போராட்டத்தில் தான் சந்தித்த தனிமை குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.விக்ரம் பிரபு நடிப்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில்,அறிமுக நடிகர் LK அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சிறை.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சி
- ·
- · sivam
ஜரீனா மொய்டு என்ற இயற்பெயரைக் கொண்ட நதியா மலையாளி பெற்றோருக்கு மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே சினிமா வாய்ப்பினை பெற்றவர். 80 களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.1984 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் பத்மினி அவர்களுடன் இணைந்து ‘நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அதே படம் தமிழில் ரீமேக் ஆனது. அதிலும் பத்மினியுடன் இணைந்து நடித்து தமிழில் அறிமுகமானார்.நதியா பல வெற்றி தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்த
- ·
- · sivam
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை பூனம் பாஜ்வா, தற்போது பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குட்டி டவுசர் மற்றும் முண்டா பனியனுடன் ஓவர் கவர்ச்சியான உடையில் எடுத்துள்ள போட்டோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அவர் நடித்த முக்கியமான படங்களில் Seval, Thenavattu, Romeo Juliet மற்றும் Jayikkira Kudhira ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாகும். இந்த படங்கள் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து, கவர்ச்சியான கதாபாத்திரங்களில் அதிகம் தோன்
- ·
- · sivam
‘கருப்பு’ படம் எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை என ஆர்.ஜே.பாலாஜி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தினை இயக்கியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்படம் எப்போது வெளியீடு என்பதே தெரியாமல் உள்ளது. ‘கருப்பு’ படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருப்பது தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.டி20 உலகப் கோப்பை போட்டிகளில் தமிழ் வர்ணனையாளராக பணிபுரிந்து வந்தார் ஆர்.ஜே.பாலாஜி. நேற்று நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி வர்ணனையின் போது ஆர்.ஜே.பாலாஜி, “ரச்சின் ரவீந்திராவையே ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி ரிலீஸ் செய்துவிட்டது. ஆனால், நான் எடுத்த படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை” என்று
- ·
- · sivam
வைகை புயல் வடிவேலு தற்போது தமிழ் திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கியுள்ளார். முன்பு போல காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், தற்போது குணசித்திர மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த மாற்றம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சமீப காலத்தில் வடிவேலு நடித்த படங்கள் அவரது நடிப்பு திறனை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக கடைசியாக வெளியான மாரீசன் திரைப்படத்தில் அவர் நடித்த விதம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த படத்தில் அவர் நடித்த நடிப்பு தனித்துவமான பாராட்டுகளை பெற்றது.ஒருகாலத்தில் கோலிவுட்டில் வடிவேலு மிகவும் பிஸியான நகைச்சுவை நடிகராக இருந்தார். அந்த நேரத்தில் நடிகர் விஜயகாந்துடன் ஏற்பட்ட மனஸ்தாபம் பெரிய விவாதமாக மாறி
- ·
- · sivam
தமிழில் கவின் ஜோடியாக ‘ஸ்டார்’ படத்தில் நடித்தவர் ப்ரீத்தி முகுந்தன். மலையாளத்தில் ‘மைனே பியார் கியா’, ‘சர்வம் மாயா’ படங்களில் நடித்துள்ள அவர், ‘இதயம் முரளி’, ஹரீஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர், இப்போது இந்திக்குச் செல்கிறார். இவர் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் உருவாகும் ‘நாகஸில்லா’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். முதலில் இதில் நடிகை லீலா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது ப்ரீத்தி முகுந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இப்படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் தயாரிக்கிறது. நகைச்சுவையுடன் கூடிய ஃபேன்டஸி படமாக உருவாகும் இதில் கார்த்திக் ஆர்யன் இச்சாதாரி
Latest Cinema (Gallery View)