Latest Cinema
- ·
- · sivam
எழுபதுகளில் ஜெயலலிதா, ' ஆனந்த விகடனில்' ஒரு கட்டுரை எழுதினார். அதில் தனக்கு நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து இருந்தார். ஒரு ரசிகர் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கடிதமாக எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்.ஒரு கடிதத்தில், “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்... இந்த தேதிக்குள் சம்மதிக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன்...” என்று ஒரு தேதியை குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். ஜெயலலிதாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோல நிறைய கடிதம் வருகிறது. அதில் இதுவும் ஒன்று என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். சில நாட்கள் கழித்து மீண்டும், அதே நபரிடமிருந்து கடிதம்... மீண்டும் அதே புராணம்... “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்... இந்த தேதிக்குள் சம்மதிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்.
- ·
- · sivam
ரஜினி ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்த நேரம். காலையில் ஒரு படம். மாலையில் ஒரு படம். இரவு வேறொரு படம். ரஜினியின் கால்ஷீட் கிடைக்காதா என தவமிருந்தவர்கள் பலர்.ஆனாலும் ரஜினிக்கு மக்கள் கொடுத்த ஆதரவை சக போட்டியாளர்களால் தடுக்க முடியவில்லை. சிலர் அப்போதைய பெரிய தலைவரோடு சிண்டு முடிந்து மோதல் வரவழைக்கப்பார்த்தனர். அப்படி மறைமுக மோதல் அந்த தலைவருக்கும் ரஜினிக்கும் ஏற்பட்டதென்றே சொல்லலாம்.அவர் நினைத்தால் எதுவும் செய்யலாம்...அப்படி ஒரு நேரத்தில் ரஜினி டென்ஷனுக்கு ஆளானார். இது வரை கஷ்டப்பட்டு எல்லாம் வீணாகிப்போகுமோ என்கிற கலக்கம் ஏற்பட்டது..ரஜினி அப்போது கண்ணதாசன் என்கிற தத்துவஞானியிடம் செல்கிறார்.கண்ணதாசன் ஒரு சிறந்த அறிவுரையை வழங்குகிறார். மௌண்ட் ரோடில் ஓடு என்று கூட சொன்னார் என சொல்வதுண்டு. இதன் மூலம் அந
- ·
- · sivam
தமிழ், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. டோலிவுட் திரையுலகில் இவர் முன்னணி நடிகையாக இருந்தாலும், திரையுலகில் இவர் அறிமுகமானது தமிழ் படங்கள் மூலம் தான். அந்த வகையில் 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் 2005-ஆம் ஆண்டு நடிகையாக தன்னுடைய கேரியரை துவங்கினார்.பிரசன்னா மற்றும் கார்த்தி குமார் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் லைலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, அழகிய அரசுரா படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு கை கொடுக்காத நிலையில், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்த துவங்கினார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்த போதும்... தமிழி
- ·
- · sivam
மோகன்லாலின் மகள் நாயகியாக அறிமுகமாகிறார். ஆசிர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் படத்தின் மூலம் விஸ்மயா மலையாள திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்கிறார். இது ஆசிர்வாத் சினிமாஸின் 37வது படமாகும். சினிமா வெளிச்சத்தில் இருந்து எப்போதும் விலகியே இருந்த விஸ்மயா, திரைத்துறையில் பின்னணி பணிகளை மேற்கொண்டு உள்ளார். எழுத்தும் ஓவியமும் விஸ்மயாவின் பேவரைட்டாக இருந்து வந்தது.'கிரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்' என்ற பெயரில் விஸ்மயா எழுதிய புத்தகத்தை பென்குயின் புக்ஸ் 2021 இல் வெளியிட்டது. கவிதைகள் மற்றும் கலைகள் நிறைந்த புத்தகம் இது. அமேசானின் 'பெஸ்ட் செல்லர்' பிரிவிலும் இந்தப் புத்தகம் இடம்பிடித்தது. தற்காப்புக் கலையிலும் ஆர்வமுள்ளவர் விஸ்மயா. மொய் தாய் என்ற தாய் தற்காப்புக் கலையைப் பய
- ·
- · sivam
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் மனைவி கௌரவதம்மாள், அவர் பட்டுக்கோட்டையாரோடு வாழ்ந்தது இரண்டே ஆண்டுகள். எனினும் அந்த நினைவுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார்.“எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும் ‘அவுக’ளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம். சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார்.அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு ஊருக்குத் திரும்பும்போது, ‘பொண்ணு எப்படிடா இருக்கு’
- ·
- · sivam
பிரேமம் படம் மூலமாக அறிமுகமான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் மாரி 2 நல்ல வரவேற்பு கொடுத்த போதிலும் அமரன் படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வரும் சாய் பல்லவிவியின் இயற்கை பேரழகிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.என்னதான நட்சத்திர நடிகையாக இருந்தாலும் சாய் பல்லவி, கல்வியை பாதியில் விடவில்லை. அவர் எம்பிபிஎஸ் படித்துள்ளார். நடிகையாக இருந்தாலும் கல்வியை முடித்திருப்பதைப் பார்த்தால், அவருக்கு கல்வியுடன், ஆர்வத்தைப் பின்பற்றுவதும் பிடிக்கும் என்பது தெரிகிறது.சாய் பல்லவி பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், அவர் வந்த பாதையை, தனது சிறிய கிராமத்தை எதையும் மறக்கவில்லை. தனது பணி நெறிமுறைகள் மற்ற
- ·
- · sivam
சின்னத்திரையில் பிரபலமான குக் வித் கோமாளி பாலா இப்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலமானார். இந்நிகழ்ச்சின் மூலமாக பிரபலமானதைத் தொடர்ந்து சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார். கெட்டப் சேஞ்ச் செய்தார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். குறுகிய காலத்திலே சினிமாவில் தன்னை ஒரு அங்கமாக மாற்றிக் கொண்டார். ஒரு சில படங்களிலும் நடிக்கவும் செய்துள்ளார்.பாலா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி பாலாவின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குநர் ஷெரிப் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் தான் பாலா ஹீரோவக நடிக்கிறார். இந்தப் படத்தில் நமீதா, அர்ச்சனா, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றன
- ·
- · sivam
யார் அந்த நடிகை தெரியுமா? பாலிவுட்டின் மூத்த அழகி சுஷ்மிதா சென் தான் அவர். சுஷ்மிதா சென் ஹைதராபாத்தில் 1975ல் பிறந்தார். மிக இளம் வயதிலேயே மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கினார். 1994 இல் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். 1996 இல் 'தஸ்தக்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், தனது வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை கண்டார். 50 வயது நெருங்கிய போதிலும் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், கிட்டத்தட்ட 12 நடிகர்களுடன் டேட்டிங் செய்ததாக செய்திகள் பரவி வருகின்றன. அதில் ரகுமான் சால், ரன்தீப் ஹூடா, விக்ரம் பட் போன்ற பெயர்கள் அடிபடுகின்றன. லலித் மோடியுடன் சுற்றித் திரிந்த அவர், பின்னர் பிரிந்து விட்டார்.சுஷ்மிதா சென் சுதந்திர சிந்தனையுள்ள நடிகை.
- ·
- · sivam
தமிழ்நாட்டில் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான லெஜண்ட் சரவணன், பிசினஸில் கொடிகட்டிப் பறந்தாலும் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்த கனவை கடந்த 2022-ம் ஆண்டு நனவாக்கினார் சரவணன் அருள். அவர் ஹீரோவாக நடித்த ‘தி லெஜண்ட்’ என்கிற திரைப்படம் 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. முதல் படமே பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்து மாஸ் காட்டினார் சரவணன்.இதையடுத்து தன்னுடைய அடுத்த படத்திற்காக இயக்குனர் துரை செந்தில்குமார் உடன் கூட்டணி அமைத்த லெஜண்ட் சரவணன், தற்போது அப்படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் அண்மையில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட லெஜண்ட் சரவணனிடம் இரண்டாவது பட ரிலீஸ் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற
- ·
- · sivam
நடிகை இலியானா தான் மீண்டும் தாயாகி உள்ளதாக அறிவித்துள்ளார்.. குழந்தை பிறந்து 9 நாட்களுக்குப் பிறகு, இந்தச் செய்தியை அவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 2025-ம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி அன்று தனக்கு குழந்தை பிறந்ததாக அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'நண்பன்' படத்தில் நடித்த இவர், தனது இரண்டாவது மகனுக்கு கீனு ரஃபே டோலன் என்று பெயரிட்டுள்ளார். இதற்கு திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- ·
- · sivam
நடிகை அனுஷ்கா விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவருக்கு, சில வருடங்களுக்கு முன்பிருந்து பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதையடுத்து இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க சுமார் ரூ.5-7 கோடி சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது. ரெட்ரோ பட நாயகி பூஜா ஹெக்டே, தமிழில் கனிசமான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அடுத்து கூலி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இவர், ஒரு படத்திற்கு ரூ.2.5-7 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா. இப்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர், ஒரு படத்திற்கு ரூ.3-8 கோடி வரை சார்ஜ் செய்வதாக கூறப்படுகிறது. நடிகை த்ரிஷா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி வெவ்வேறு மொழிகளில் தற்போது நடித்து வர
- ·
- · sivam
1999ல் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘வாலி’படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தார் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய்யை வைத்து 'குஷி' படத்தை இயக்கினார். அடுத்தடுத்த படங்களின் வெற்றி மூலம் தன்னை தவிர்க்க முடியாக இயக்குநராக நிலைநிறுத்திக்கொண்ட எஸ்.ஜே.சூர்யா, அதனைத்தொடர்ந்து ‘நியூ', ‘அன்பே ஆருயிரே' போன்ற படங்களை இயக்கி தானே கதாநாயகனாகவும் களம் இறங்கினார். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘இசை’. இந்தப்திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், அதன்பிறகு தொடர்ந்து படங்கள் இயக்குவதை தவிர்த்துவிட்ட அவர், முழுநேர நடிகராகவே மாறிவிட்டார். அடுத்தடுத்து பல படங்களில் வில்லனாக நடித்து தனது தனித்துவமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.
Latest Cinema (Gallery View)