Latest Cinema
- ·
- · sivam
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி, ஜெயிலர் 2 என இரண்டு பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகின்றன. இதில் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் ரஜினி கைவசம் உள்ள மற்றொரு திரைப்படமான ஜெயிலர் 2 ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். மேற்கண்ட இரண்டு திரைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.சினிமாவில் பிசியாக உள்ள கமல்ஹாசன், அரசியலிலும் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியின் தலைவராக உள்ளார். அக்கட்சி திமுக உடன் கூட்டணி அமைத்த பின்னர், அந்த கூட்டணியில் இருந்து நடி
- ·
- · sivam
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்கிற பழமொழிக்கு சிறந்த உதராணம் நடிகர் கிங் காங் தான். அவர் ஆள் சிறிதாக இருந்தாலும் மிகப்பெரிய திறமைசாலி. நடிப்பு, நடனம் என அனைத்திலும் அசத்தலாக நடித்திடுவார்.கிங் காங்கின் மூத்த மகள் கீர்த்தனாவின் திருமணம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. திருமணம் கோவிலில் சிம்பிளாக நடைபெற்றாலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செம கிராண்டாக நடத்தி இருந்தார். திருமணத்துக்கு முன்னர் பிரபலங்களுக்கு கிங் காங் பத்திரிகை வைத்தது மிகவும் டிரெண்ட் ஆனது. முதல்வர் தொடங்கி நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என ஏராளமான முன்னணி நட்சத்திரங்களையும் நேரில் சந்தித்து அவர் பத்திரிகை கொடுத்தது இணையத்தில் வைரலானது.திருமணம் முடிந்த பின்னர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், வடி
- ·
- · sivam
எம்.ஜி.ஆர், பிரபலமான நபராக விளங்க, பலவகையான காரணங்கள் உள்ளன.பதினெட்டு வயதிலேயே நடிக்க வந்த எம்.ஜி.ஆர், 35 வயதிற்கு மேல்தான், படங்களில் நாயகனாகவே நடிக்க ஆரம்பித்தார். 45 வயதிற்குள், தமிழ்த் திரையுலகையே தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அளவுக்கு, உச்சமதிப்புள்ள நடிகராகப் பரிணமித்தார். எம்.ஜி.ஆருடைய இந்த, அபாரமான மற்றும் விசித்திரமான திரையுலக வளர்ச்சி, தமிழ்த்திரையுலகில் வேறெந்த நடிகருக்கும், சாத்தியப்பட வாய்ப்பே இல்லை. அந்த வகையில், பிரபலமான நபராக விளங்குகிறார்.தமிழ்த் திரையுலகில், ஓரளவுக்குத் தான் நாயக நடிகராக வளரத் தொடங்கும்போதே, வேறெந்த நடிகரும் செய்யத் துணியாத அளவிற்கு, பெரும்பொருட் செலவில், "நாடோடி மன்னன்" திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தார். எம்.ஜி.ஆர், கடன்வாங்க
- ·
- · sivam
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜமின்தாரின் மகன் என்பது பலரும் அறியாத தகவல்...திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு தான் எம்.எஸ்.பாஸ்கரின் சொந்த ஊர்எம்.எஸ்.பாஸ்கரின் தந்தை RM.சோமுத்தேவர் அவர்கள் ஜமீன்தாராக இருந்தார்,ஊர் மக்களால் RMS என்று அன்புடன் அழைக்கப்பட்டார்அந்த பகுதியில் அவருடைய வார்த்தைக்கு யாரும் மறு பேச்சு பேச மாட்டார்கள் அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கும் மதிப்பும் இருந்தது...எம்.எஸ் பாஸ்கர் அப்பா சோமுதேவர் வள்ளல் போல் இருந்தவர். யார் உதவி கேட்டாலும் உடன் கொடுத்து உதவுவார்.அந்த காலகட்டத்திலேயே 1965களில் வெள்ள கார் வைத்திருந்தார்..இடும்பவனத்தில் தென்னை தோப்பு நில்ம்..வைத்திருந்தார்எம
- ·
- · sivam
வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில், கண்ணும் கண்ணும் கலந்து என்கிற மிகவும் பிரபலமான ஒரு போட்டி நடனம் வரும்.ஹீராலால் என்ற டான்ஸ் மாஸ்டர் இரு நாட்டிய தாரகைகளுக்கும் நடன அசைவுகள் சொல்லித்தந்தார்.படத்தின் தயாரிப்பாளர் வாசனிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரிடம் வேலை செய்தவர்கள் எல்லாம் எழுபது வயதைத் தாண்டி இருக்கவேண்டும். மேக்கப், லைட்போய், காமிராக்காரர், வசனகர்த்தா இப்படி எல்லாரும் வாசனுடைய வயதுக்காரர்களாக இருந்தார்கள். ஒரு லைட்டை தள்ளி வைப்பது என்றால்கூட அரைமணி நேரம் எடுக்கும், அதனால் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நகர்ந்தது.பத்மினிக்கு மற்றப் படப்பிடிப்புகள் இருந்தன. வைஜயந்தி மாலா வடக்கில் இருந்து இதற்காகவே வந்திருந்தார். பத்மினி இல்லாத சமயங்களில் வைஜயந்தி மாலா ஹீராலாலிடம் ரகஸ்யமாக சில நடன அசைவுகளை ஒத
- ·
- · sivam
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு எம்.ஜி.ஆர். சென்றிருந்தார். அப்போது தனது நண்பர் ஒருவரை பார்க்க காரில் சென்று கொண்டிருந்த போது ‘நாயர் டீ ஸ்டால்’ என்கிற போர்ட்டை பார்த்ததும் ஆச்சர்யப்பட்டு காரை நிறுத்த சொல்லி, அந்த கடைக்கு சென்றார். அந்த கடையின் முதலாளியிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவருக்கு ஆச்சர்யம் கலந்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.அவர் யார் தெரியுமா?…எம்.ஜி.ஆர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு முன் சென்னையில் அம்மாவுடன் வறுமையில் வாடிய போது சென்ட்ரல் பகுதியில் தங்கியிருந்தார். ஒருநாள் வீட்டில் சமைக்க கூட அரிசி இல்லை. அப்போது, அவரின் வீட்டுக்கு அருகே குடியியிருந்த ராமன் குட்டி என்பவர் ஐந்து ரூபாயை கொடுத்து உதவினார். அந்த பணத்தில்தான் அன்று அவர்கள் உணவ
- ·
- · sivam
தன்னை மறந்து சொக்கிப் போனார் கண்ணதாசன்,அந்தப் பருவ மங்கை துள்ளிக் குதித்து பந்து விளையாடும் பேரழகில்..!இது நடந்தது 'ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது.அந்தப் படத்தில் அபிராமி பட்டர்,அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும் பாடல்.இந்தக் காட்சிக்கு 'அபிராமி அந்தாதி' பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தார் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.ஆனால் அவர் எதிர்பார்த்த உணர்வுகள் அதில் வரவில்லை."அழைத்து வாருங்கள் கண்ணதாசனை!"வந்தார் கண்ணதாசன்.காட்சியை விளக்கினார் இயக்குநர்.கண்ணதாசன் தயாரானார் :"முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம். எழுதிக் கொள்ளுங்கள்."கண்ணதாசன் சொல்லச் சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார்."மணியே மணியின் ஒளியேஒளிரும் மணி புனைந்தஅணியேஅணியும் அணிக்கழகே
- ·
- · sivam
தமிழ் சினிமாவில் செம பிசியான ஹீரோ என்றால் அது தனுஷ் தான். அவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் அடுத்தடுத்து படங்களை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் ராயன் படம் வெளியானது. இந்த ஆண்டு தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. இதையடுத்து அவர் இயக்கி உள்ள இட்லி கடை திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கான டப்பிங் மற்றும் ரீ-ரெக்கார்டிங் பணிகளில் பிசியாக இருந்த தனுஷ், சைடு கேப்பில் தன்னுடைய அடுத்த பட ஷூட்டிங்கையும் தொடங்கி இருக்கிறார். அவரின் 54வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.தனுஷ் நடிக்கும் D54 படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறு
- ·
- · sivam
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் நாகேஷிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.அவரது நடிப்பில் 1964-ம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’படப்பிடிப்பின்போது, தனக்கும் நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கும் இடையே நிகழ்ந்த சுவாரஸ்யமானச் சம்பவத்தை, ஒரு வார இதழுக்காக நாகேஷ் பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதி மட்டும் இங்கே.“சர்வர் சுந்தரம் படம் தொடங்கி முதல் நாள் படப்பிடிப்புக்கு நான் போனேன். அந்த கேரக்டருக்கு உரிய கோட் சூட் உடையோடு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நான் போய் இறங்கினேன்.படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் தனியாக ரம்மியமான சூழலுடன் கூடிய ஒரு இடம் இருக்கும். காற்றோட்டமான அந்த இடத்தில், ஷாட் இல்லாத நேரத்தில் நடிகர்கள் அந்த இடத்தில் கூடியிருப்பார்கள். நான் போகும்போது ரங்காராவ் தனது நண்பர்களோடு அமர்ந்திருந்தார்.எ
- ·
- · sivam
அந்த காலத்தில் நாடகங்கள் போடுவதற்கு மூல ஊற்றாக இருந்தது ஜெனரேட்டர்கள் தான் என்று சொன்னால் மிகையல்ல. அந்த காலத்திய ஜெனரேட்டர்கள் என்றால் இப்போது இருப்பதைப் போன்று சிறிய அளவில் இருக்காது. ஒரு பெரிய அறை அளவுக்கு இருக்கும் அந்த காலத்திய ஜெனரேட்டர்கள்.ஒரு நாடகம் தொடங்குவதற்கு முன்னால் விளக்குகளை எரிய வைப்பார்கள். அதற்கு முன்னால் ஜெனரேட்டர்களை மேனுவலாக சுத்த விட்டு ஆன் செய்வார்கள். அந்த காலத்தில் நாடகக் கம்பெனி வைத்திருந்த ஜெகநாதன் ஜெனரேட்டர் ஆன் பண்ணுவதை மிகவும் பக்திமயமாக செய்வார். ஜெனரேட்டர் ஆன் செய்யும் போது அதற்கு தீப ஆராதனை காட்டும் வழக்கம் அவருக்கு இருந்தது. இதை ரொம்ப நாளாகவே கவனித்துக் கொண்டிருந்தான் புதிதாக சேர்ந்த அந்த இளைஞன்.ஒருமுறை ஜெனரேட்டர் ஆன் ஆகவில்லை. கம்பெனி முதலாளி ஜெகநாதன் அந்த
- ·
- · sivam
அடுத்தடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர அவர் கைவசம் உள்ள மற்றொரு திரைப்படமான டியூடு, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த நிலையில் டியூடு படத்தின் பிசினஸ் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சுமார் ரூ.25 கோடிக்கு டிய
- ·
- · sivam
இப்போதெல்லாம் இந்த நடிகர் பணக்கார அப்பா, அந்த நடிகர் ஏழை அப்பா என்றெல்லாம் பார்க்கப்படுகிறது. அதன்படியே கேரக்டர்களும் கொடுக்கப்படுகின்றன. ஆனால், ரங்காராவ் இப்படியாக கோடு கிழித்து, எல்லை வைக்கமுடியாத அசுரத்தனமான நடிகர். ஒரு படத்தில் பணக்கார அப்பாவாக இருப்பார். கோட்டும்சூட்டும் போட்டுக்கொண்டு, பைப் பிடித்தபடி வருவார். இன்னொரு படத்தில் அழுக்குச் சட்டையும் பழுப்பு வேட்டியுமாக, குடிசையில் இருப்பார்.வறட்டு கெளரவம் கொண்ட பணக்காரன், தர்ம சிந்தனையுள்ள பணக்காரன், பாசத்துக்கு ஏங்கும் அப்பா, மோசம் செய்யும் அப்பா, நம்பியவரை ஏமாற்றும் அப்பா, நம்பி ஏமாறும் அப்பா, முசுடாக இருக்கும் அப்பா, காமெடி கலகல அப்பா என்று எந்த வேடமாக இருந்தாலும் அதை ரங்காராவிடம் கொடுத்தால், அவர் பார்த்துக்கொள்வார். அந்தக் கதாபாத்திரத
Latest Cinema (Gallery View)